வள்ளுவன்

Rating 3/5

24

a K Vijay Anandh review

என்னங்கடா இது இன்னமும் கற்பழிப்பு பழிவாங்கல் என்று படம் எடுத்து கொண்டிருக்கிறார்கள்..? என்கிற சலிப்பு தேவையில்லை, ஏனென்றால், இன்னமும் கற்பழிப்புகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

அதிலும் என்றோ எடுக்கப்பட்ட வள்ளுவன் படத்தின் காட்சிகள் இன்றைக்கும் நிஜமாக அரங்கேறி கொண்டிருக்கின்றன.

ஆனால், படங்களில் காட்டப்படும் தீர்வுகள் இன்னும் நிஜமாகவில்லை, குறிப்பாக தமிழகத்தில்.

அந்த தீர்வுகளும் சாத்தியமாகிவிட்டால், நிச்சயம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறையும்.

இந்தப்படத்தில் வள்ளுவரையும் துணைக்கு  அழைத்து வந்திருக்கிறார்கள்.

பொதுவாக திருவள்ளுவர் கொல்லாமையை வலியுறுத்துபவர் என்றாலும் ”  கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்களைகட் டதனொடு நேர்..” இப்படியும் ஒரு குறளை பாடி வைத்தும் இருக்கிறார்.

அதன் படி தவறு செய்பவர்களை கொல்கிறான் கதாநாயகன். அதனை , மிகவும் புத்திசாலியான காவல்துறை அதிகாரியாக வரும் பிரேம் கண்டுபிடிக்கிறார்.

கடைசி கொலைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில் ஒரு ட்விஸ்ட்.

இரண்டு நாயகர்கள் என்று சொல்லும் அளவு கொலை செய்யும் சேட்டன் சீனுவும் காவல்துறை அதிகாரி பிரேமும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

முதியோர் இல்ல சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகவும் உணர்வுப்பூர்வமாக படமாக்கப்பட்டு இருக்கின்றன.

அட நம்ம சந்தானம் பட நாயகி ஆஷ்னா சவேரியா இது, அப்பழுக்கில்லாத அழகியாக அற்புதமாக நடித்திருக்கிறார்.

பாட்டியாக, தாயாக, சகோதரியாக, மகளாக நம்மை ஒவ்வொரு தருணங்களிலும் மகிழ்ச்சிப்படுத்தி கொண்டிருக்கும் பெண்மையை போற்றுவோம், அவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், வள்ளுவன் வழியில்!