Once More

25

a K Vijay Anandh review

இது அர்ஜுன் தாஸ் படமா அதிதி ஷங்கர் படமா என்று ஒரு சந்தேகம் வந்துவிடுகிறது. அந்தளவுக்கு தனது இயல்பான உண்மையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துவிடுகிறார் அதிதி ஷங்கர்.

நம்ம பக்கத்து வீட்டு பெண் போல ஒரு பரிச்சயம்,  நான் இருக்கேன் என்று எல்லாவற்றையும் இழுதுப்போட்டு செய்யும் ஒரு இயல்பான பாத்திரம்.

இவர் போன்ற அக்மார்க் தமிழ் முக நாயகிகளை போட்டு படம் எடுக்க உண்மையில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கருக்கே வாய்ப்பு கிடைக்கவில்லை அல்லது ஹீரோயின் விஷயத்தில் அவர் தன்னம்பிக்கை இல்லாதவராக பெரும்பாலும் பாலிவுட்டையே நம்பி இருந்துவிட்டார்.

எட்டு வருஷம் நம்பிக்கையோடு காத்திருந்து, தான் காதலை சொல்லும் இடத்தில் அவர் கண்களில் தெரியும் ஒரு வெள்ளிக்களிப்பு. என்னை பார்த்திருக்காவிட்டால்… என்று கேட்கும் அர்ஜுன் தாஸ் இடம், அது தான் பார்த்துட்டேனே… அதுதான் destiny… என்று இயல்பாக  …

இவளை அர்ஜுன் தாஸ் காதலிச்சே ஆகவேண்டும் ஆகவேண்டும் என்று ரசிகர்கள் நினைக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ரசிகர்களின் ஆசை பொய்க்குமா ? மிகவும் யதார்த்தமான கிளைமேக்ஸ் கொடுத்து நம்பிக்கை கொடுத்திருக்கிறார் இயக்குநர்  விக்னேஷ் ஶ்ரீகாந்த் .

அர்ஜுன் தாஸ் , அட அந்த இடைவேளைக்கு முன் ஒரு 10-15 நிமிடங்கள், முகம் பூராம் புன்னகை, நீண்ட கேசம், கல்லூரி மாணவனுக்கே உரித்தான துள்ளல் என்று மௌன ராகம் கார்த்திகை நினை படுத்துகிறார்.

அர்ஜுன் தாஸ்,  இது நல்லாருக்கு, இப்படி இன்னும் முழுப்படமும் வருவது போல படம் செய்யுங்கள்.

சோனா ஒலிக்கல், கொஞ்சம் பரிதாபத்தையும் அதைவிட அதிகமாக எரிச்சலையும் அள்ளி செல்கிறார்.

ஹேசம் அப்துல் வகாப்,  நல்லாருக்கு பிரதர் உங்க இசை நல்லா இருக்கு…

சித்ரா லட்சுமணன், உள்ளிட்ட குடும்பத்தினராக வருபவர்கள் படம் ஒரு லைவ் ஆக பயணிப்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

நடுவுல, ஒரு Gay உறவை காண்பித்து, ஒருவேளை அர்ஜுன் தாஸ் உம்  அதுக்கு தான் கல்யாணம் வேண்டாம் கல்யாணம் வேண்டாம் என்று சொல்கிறாரோ என்று ரசிகர்களை கொஞ்சம் டேக் டைவரசனில் சுற்றவிட்டு இன்னொரு காரணத்தை சொல்லியிருப்பது இயக்குனர் விக்னேஷ் ஶ்ரீகாந்த் இன் அருமையான திரைக்கதை யுக்தி.

அப்புறம் வசனத்தை குறைத்து எமோஷனலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அர்ஜுன் தாஸ்  – அதிதி ஷங்கர், அர்ஜுன் தாஸ் – சோனா ஒலிக்கல் சம்பந்தப்பட்ட  அந்த நீண்ட காட்சிகள் அருமை.

Once More , பார்க்கலாம்.

அதாவது Once More ஐ Once More பார்க்கலாம்!