a K Vijay Anandh review
தலையில் சொட்டை விழுவதைக்கண்டு கவலைப்படுபவர்களைப் பார்த்து , அதென்ன மசுருதான… போனா போகட்டும் விடு… என்று சுலபமாக அறிவுரை சொல்பவர்கள், இனி அந்த அறிவுரையை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஏனென்றால், அது வெறும் மசுரு அல்ல, கோல்டு, பிளாக் கோல்டு.
வெற்றி, அதே தாடி, அதே ரியாக்ஷன் என்று அங்கலாய்ப்பவர்கள் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ள வேண்டும். வெற்றி, வீரபாண்டிய கட்டபொம்மனிலோ அல்லது தசாவதாரத்திலோ நடித்து உங்களை சோதிப்பதில்லை. அவரைத்தேடி வரும் கதைகளில், அவருக்கு எது பொருந்துகிறதோ அதையே தேர்ந்தெடுத்து நடிக்கிறார், இன்னும் சுவராஸ்யம் என்னவென்றால், இது போன்ற எளிமையான அதே சமயம் முக்கியமான பிரச்சினைகளை பற்றி பேசும் படங்கள் அவருக்கு தானாக அமைகின்றன. வழக்கம் போல , எளிய குடும்பத்தில் இருந்து வரும் நாயகன் வெற்றி, தான் சந்திக்கும் பிரச்சினைகளை எப்படி வெற்றிகரமாக கையாண்டு ஜெயிக்கிறார் என்பது தான், பிளாக் கோல்டு படத்தின் கதையும்.
நம்பும் படியான அசாத்தியமான காட்சியமைப்புகளில் இயக்குனர் தீரன் அருண்குமாரும் நாயகன் வெற்றியும் சேர்ந்து ஜெயிக்கிறார்கள்.
ஒரு பெரிய கோவிலில் டன் கணக்காக சேரும் முடிகளை டெண்டர் எடுப்பதில், ஆரோல் டி சங்கருக்கும் அவரது முன்னாள் ஊழியர் ஏ வெங்கடேஷுக்கும் இடையில் ஏற்படும் மோதல்களில், வெற்றியின் தந்தையாக வரும் லிவிங்ஸ்டன் , சிக்கிக்கொள்வது, பலியாவது, யாரும் எதிர்பாரா வகையில் அவரை கொன்றவர்களை ஒரு பக்கம் போலீஸ் அபிராமியும், வெற்றியும் தேடுவது. அதில் யார் முந்திக்கொள்கிறார்கள் என்பதே இந்தப்படத்தின் விறுவிறுப்பான திரைக்கதை.
ஆரோல் டி சங்கர், வழக்கம் போல அட்டகாசப்படுத்தியிருக்கிறார். ஒரு பெரிய தாதாவின் வாரிசாக அவரது மகனைத்தான் காட்டுவார்கள் தமிழ் சினிமாக்களில், ஆனால், அவரது டாம்பாய் போன்ற மகளை அவரது அடுத்த வாரிசாக காட்டுவதும், எல்லாவற்றிலும் அவர் தனது தந்தைக்கு அரணாக நிற்பதும் புதுமையாக படைக்கப்பட்டிருக்கிறது, சபீதா ராய் சிறப்பாக நடித்திருக்கிறார்.
நிழல்கள் ரவி உட்கார்ந்து கொண்டே அதகளம் செய்திருக்கிறார்.
அபிராமி, போலீஸ் இன்ஸ்பெக்டராக அசத்தியிருக்கிறார். ஹீரோயின்..? பிரியாலாயா என்றொரு ஹீரோயின் வருகிறார். அவரும் வெற்றியும் சந்தித்து பிரியும் இடங்களில், அவரை இழுத்து அணைத்து ஒரு முத்தம் கொடுத்து அனுப்பியிருக்கலாம் வெற்றி, அது கூட செய்யாமல் இருப்பது தான் கொஞ்சம் குறையாக இருக்கிறது. அபிராமியுடனும் அப்படியே நடிக்கிறார், அவரை பிடித்து முத்தும் கொடுக்க முடியாது. ஆனால், ஹீரோயினை..? கொஞ்சம் இறங்கி அடி(ணை)க்கனும் வெற்றி!
சவுரி முடி வாங்க விற்க ஊருக்குள் நுழையும் அறிமுகமில்லாதவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று பிளாக் கோல்டு படம் ரசிகர்களை எச்சரித்திருப்பது, நல்ல விஷயம்.
பிளாக் கோல்டு, நிஜமான தங்கம்!