a K.Vijay Anandh review .
காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயலும் ஆதித்யா பாஸ்கர் – அம்மு அபிராமி , அதாவது இருவருக்குமே தனித்தனியாக காதல் தோல்வி , மருத்துவமனையில் அட்மிட் ஆகிறார்கள்.
மதக்கலப்பு திருமணம் செய்துகொண்ட வினோத் கிஷன் – அபிராமி வெங்கடாசலம் ஜோடி. அதில், அபிராமி உயிருககு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்.
ஒரு மூத்த தம்பதியராக டெல்லி கணேஷ்- லீலா தாம்சன்,இதய அறுவை செய்யும் நிலையில் லீலா தாம்சன்.
முதலிருவரையும் ஒரு நண்பர் இணைக்கிறார். கடை இருவரும் தானாகவே இணைந்து கொள்கிறார்கள். அதிலும் வினோத் – டெல்லி கணேஷ சந்திப்பில் காட்சிகள் விரியும் போது, அந்த அப்பா டெல்லி கணே ஷாக இருக்குமோ என்று ஆடியன்ஸுக்கு ஒரு சர்ப்ரைஸ் எதிர்பாரப்பை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குநர்.
ஆதித்யா பாஸ்கர் க்கும் அம்மு அபிராமிக்கும் மருத்துவமனையில் துளிர்க்கும் காதல் ஒரு கவிதையாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
வினோத் கிஷன் – அபிராமி தாம்பத்யம் ஒரு சிறுகதை என்றால், டெல்லி கணேஷ் – லீலா தாம்சன் தாம்பத்யம் ஒரு இலக்கியம் போல ரசிகர்களுக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த மூன்று ஜோடிகளையும் மூன்று வெவ்வேறு வானங்களில் சிறகடிக்க வைத்து ரசிகர்களுக்கு சிலிர்ப்பான ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் AMR முருகேஷ்.
அவருக்கு முழுமையாக ஒத்துழைத்திருக்கிறார்கள் இளம் ஒளிப்பதிவாளர் சார்லஸ், எடிட்டர் அஜய் மனோஜ் மற்றும் இசையமைப்பாளர்கள்.
ஆகஸ்டு 11 முதல் ஆஹா ஓடிடி தளத்தில் வான் மூன்று படம் வெளியாகிறது.
குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்து பார்க்க மிக மிக தகுதியான படம்.
mysixer rating 4/5