Kushi

காதல், கடவுள் நம்பிக்கை, நம்பிக்கையின்மை ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டது

29

a K.Vijay Anandh review

தீவிர கடவுள் நம்பிக்கை கொண்ட ஆன்மீக பேச்சாளரின் மகள், கடவுள், சாஸ்திர சம்பிரதாயங்களின் மீது நம்பிக்கை துளியும் இல்லாதவரின் மகன் – காதலிக்கிறார்கள், இணைந்தார்களா..?  இல்லையா..?  இருவகையான பெற்றோரில் யார் தோற்று, யார் ஜெயிக்கிறார்கள் என்பதே குஷி படத்தின் கதை.

பொதுவாக இப்படி ஒரு கருவை  சமூகநீதி, பகுத்தறிவு பேசிக்கொண்டிருக்கும் தமிழ் சினிமா படைப்பாளிகள் கையில் எடுத்திருந்தால் கடவுள் நம்பிக்கை கொண்ட குடும்பத்தினருக்கு படுதோல்வியை பரிசளிக்கும் விதமாக திரைக்கதை அமைத்திருப்பார்கள்.

ஆனால், ஆத்திகனும் தோற்காமல், நாத்திகனும் தோற்காமல் விஜய்தேவரகொண்டா , சமந்தா வின் காதலை ஜெயிக்க வைத்திருக்கிறார் தெலுங்கு இயக்குநர்  ஷிவ் நிர்வாணா.

துடுக்குத்தனமான உடல்மொழியுடன் சமந்தாவை உருகி உருகி காதலிக்கும்  விஜய் தேவரகொண்டா மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். பாகிஸ்தான் பெண் என்று நம்பி அவருக்காக அவரது தம்பியை தேடி அலையும் காட்சிகள் செம்ம.

நான் பாகிஸ்தான் முஸ்லீம் இல்லை திருச்செந்தூர் தமிழ் பிராமின் என்று அப்பாவியாக முகத்தை வைத்து கொண்டு விஜய் தேவரகொண்டாவின் காதலை ஏற்றுக்கொண்டு துணிச்சலான முடிவுகள் எடுக்கும் சமந்தா ஆச்சிரியப்படவைத்திருக்கிறார்.

அவர்களுக்கு ஒரு வழிகாட்டி தம்பதியராக வரும் ஜெய்ராம், ரோகினி அவர்களது மகளின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அனைவரையும் அழவைத்துவிடுகிறார்கள்.

விஜயின் அம்மாவாக வரும் சரண்யா, சமந்தாவின் பாட்டியாக வரும் லட்சுமி,  முரளி சர்மா, சச்சின் கெடகர் என்று ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

மணிரத்னம் பட வரிசைகளை கொண்ட பாடல் உட்பட அனைத்தும் ஹேஷம் அப்துல் வஹாப் இசையில் இனிமையாக இருக்கின்றன. காஷ்மீர் அழகை மட்டுமல்லாது விஜய் – சமந்தா காதலையும் அழகாக படம்பிடித்திருக்கிறது முரளியின் கேமரா.

இன்னும் கொஞ்சம் அழுத்தமான காரணங்கள் வைத்திருக்கலாம் என்றாலும், ஒரு மிகச்சிறப்பான பொழுதுபோக்காக குஷி வெளிவந்திருக்கிறது.

இளைஞர்களின் கொண்டாட்டம் , Kushi

mysixer rating 4/5