a K.Vijay Anandh review
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழகான காதல் கலாட்டா கல்யாணம் கதையை பார்த்த, திருப்தி. இதில் காதலும் கலாட்டாவும் ரியோ ராஜ் மாளவிகா மனோஜ் ஆகியோருக்கிடையிலும், கல்யாணம் ரியோராஜ் பாவ்யா திரிக்கா இடையிலும் நடப்பது சுவாரசியமான திரைக்கதை. இயக்குனர் ஹரிஹரன் ராம், எவ்வளவு அமைதியாக பொறுமையாக காதல் காட்சிகளையும் கல்யாணத்திற்கு பிறகு நடக்கும் காட்சிகளையும் எழுதி இருக்கிறார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ் அதிரடி அதிரடி என்று எட்டு கால் பாய்ச்சலில் பாய்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு மென்மையான மெதுவான அதே நேரம் மிகவும் வலுவான ஒரு திரை கதையுடன் திருப்தியான ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
லவ் அட் பஸ்ட் சைட் க்கு கொடுத்திருக்கும் விளக்கம் அற்புதம். நண்பர்களுடன் ஜாலி கல்லூரியில் கலாட்டா திகட்ட திகட்ட காதல் அரியர் இல்லாமல் 4 வருட படிப்பு இந்த வசனத்தில் அரியர் இல்லாமல் 4 வருட படிப்பு என்கிற வார்த்தை இளைஞர்களுக்கு குறிப்பாக இளம் ரசிகர்களுக்கு நல்ல விஷயத்தை சொல்லி இருக்கிறது. நொடிப்பொழுதில் கடந்து போகும் இந்த வசனத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்டால், முக்கியத்துவம் தாள் என்பது தான் பதில்.
நடிகர்களை எடுத்துக் கொண்டால், இந்த ரியோ விற்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக ஒரு ஏறுமுகம் தரக்கூடிய படமாக ஜோ அமைந்துள்ளது என்றால் மிகை ஆகாது. முதல் பாதியில் இதயம் முரளி அளவிற்கு சமத்தாக காதல் செய்கிறார், நடுநடுவே காதலியுடன் ஊடல்கள் இருந்தாலும் அவை கூடல்களிலேயே முடிகிறது. இரண்டாவது பாதையில் வாத்தி கம்மிங் ரேஞ்சிற்கு, ஒரு முதிர்ந்த மாஸ் நடிகராக மிளிர்கிறார்.
அன்புதாசன், ஏகன் ஆகியோர் பழைய தமிழ் சினிமா கதாநாயகர்களின் நண்பர்களாக வரும் சின்னி ஜெயந்த், விவேக் ஆகியோரை நினைவு படுத்துகிறார்கள்.
மாளவிகா மனோஜ், தமிழ் ரசிகர்களுக்கு பிடித்து போகும் இன்னொரு கதாநாயகி. காதல் வயப்படும் காட்சிகளிலும் மோதல் முற்றும் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
பாவ்யா, இரண்டாவது பாதையில் கிட்டத்தட்ட நீலாம்பரி கதாபாத்திரத்தையொத்த ஒரு திமிரான நாயகியாக வந்தாலும், இள வயதில் ஒரு கல்லூரியின் நிர்வாக மேலாளராக வந்து ப இளம் பெண்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுக்கும் கதாபாத்திரமாக மிளிர்கிறார்.
ராகுல் கே ஜி விக்னேஷின் ஒளிப்பதிவு மற்றும் சித்து குமாரின் இசை படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருக்கின்றன.
ஒரு நல்ல படத்தை தயாரித்த திருப்தி நிச்சயம் இந்த படத்தின் தயாரிப்பாளர் அருள் ஆனந்து க்கு கிடைத்திருக்கும், அதே திருப்தி இந்த படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் கிடைக்கும்.
ஜோ, நல்ல மகன், நல்ல நண்பன், நல்ல மாணவன், நல்ல காதலன், நல்ல கணவன்,