சில நொடிகளில்

mysixer rating 4/5

238

a K.Vijay Anandh review

மலேசியாவில் இருந்து இந்தப் பெண் புன்னகை பூ கீதா விடாமல் தமிழ் சினிமாவை துரத்திக் கொண்டிருக்கிறாரே,அப்படி என்ன தமிழ் சினிமாவின் மீது இவருக்கு காதல்? என்று நினைப்பவர்களுக்கு சரியான பதிலாக சில நொடிகளில் படத்தை தயாரித்து நடித்தும் இருக்கிறார். பாவாடை தாவணி போட்டு நடித்தார், சமீபத்தில் ஒரு படத்தில் காக்கி சட்டை போட்டு காவல் அதிகாரியாகவும் நடித்தார். இந்தப் படத்தில் சின்ன வீடு கல்பனாவை பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்து இருக்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து இயல்பாக வாழ்வை கொண்டாடுவதில் ஆகட்டும் கணவன் ரிச்சர்டுடன் காட்டும் அதிகாரத்துடன் கூடிய ஒரு அக்கரை ஆகட்டும் ஒரு தேர்ந்த நடிகையாக ஜொலித்திருக்கிறார்.

ரிச்சர்ட் ரிஷி, சண்டைக் காட்சிகள் இல்லை டூயட் காட்சிகள் இல்லை இருந்தாலும் இந்த படம் தான் இவருக்கு ஒரு சிறப்பான களமாக அமைந்திருக்கிறதோ என்று நினைக்கின்ற அளவிற்கு அழகியல் சிகிச்சை நிபுணராக, ஒரு பிளேபாய் கதாபாத்திரத்தில்,  அதேசமயம் மனைவியிடம் எல்லாம் உண்மைகளையும் சொல்லி இனி ஒரு நல்ல வாழ்க்கை வாழலாம் என்று முடிவு எடுக்கும் இடங்களில் எல்லாம் சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். யாஷிகா ஆனந்தின் மறைவிற்கு தான்தான் காரணமோ என்று படபடப்பின் உச்சத்திற்கு செல்வதாகட்டும், உண்மை தெரிந்து இயல்பாக எழுந்து நிற்பதாகட்டும், ரிச்சர்ட் சிறப்பாக நடித்திருக்கிறார்.

யாஷிகா ஆனந்த், ஒரு மாடலாக வந்து ரிச்சர்டின் வாழ்க்கையில் புகுந்து முதல் பாதியில், ஒரு நல்ல ரொமான்டிக் ஆங்கில படம் பார்த்த திருப்தியை ரிச்சர்டுடம் சேர்ந்து ரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறார்.

யாஷிகா ஆனந்தின் தங்கை, புன்னகை பூ கீதாவின்  தோழிகள், ரிச்சர்ட் பணிபுரியும் மருத்துவமனையில் வருபவர்கள் முதல் அட்மாஸ்பியரில் இருக்கும் துணை நடிகர்கள் வரை மிகச் சரியான தேர்வாக கண்களுக்கு விருந்தளிக்கிறார்கள்.

அபிமன்யு சதானந்தன் ஒளிப்பதிவில் லண்டன், பெரும்பாலும் வீட்டிற்கு உள்ளாகவே நடப்பது போன்ற காட்சிகள் தான் என்றாலும் சிறப்பான ஒளிப்பதிவில் சில நொடிகளில் நிச்சயம் ரசிகர்களை கவரும்.

ஐந்து இசையமைப்பாளர்கள் சேர்ந்து நல்ல இசையை வழங்கி இருக்கிறார்கள்.

சில நொடிகள்,  தவறு செய்வதற்கும் தீர்வு காண்பதற்கும்.  சில நொடிகளில் நாம் எடுக்கும் முடிவுகள் நம்மை செம்மைப்படுத்தவும் அல்லது கீழே தள்ளவோ செய்துவிடும்.

இந்த சில நொடிகளில் ரசிகர்களின் சிந்தைக்கு மருந்தாகவும் கண்களுக்கு விருந்தாகவும் அமையும் என்றால் மிகை ஆகாது.