மூன்றாம் மனிதன் – Review

mysixer rating 3/5

742

a K.Vijay Anandh review

சோனியா அகர்வால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை ரசிகர்கள் இப்படியெல்லாம் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள். ஆனாலுய், கதையின் முக்கியத்துவம் கருதி, மிகவும் துணிச்சலுடன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஜொலித்திருக்கிறார்கள்.

குடும்பங்களை சீரழிப்பதில்  மதுவுக்கு முதலிடம் என்றாலும், ஒரு பெண் வாயிலாக குடும்ப ரகசியங்கள் குறிப்பாக கட்டில் சமாச்சாரங்கள் மூன்றாவது மனிதரிடம் சென்றால், என்ன ஆகும் என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

என்னதான் அனுயவ நடிகர்கள் ஒரு பக்கம் வழக்கமான பாணியில் சிறப்பாக நடித்திருந்தாலும், இயக்கு நரும் நடிகருமான ராம்தேவ் மற்றும் அவரது மனைவி கதாபாத்திரம் மிகவும் இயல்பாக அதே நேரம் ரசிகர்களை கவரும் விதத்தில் நடித்திருக்கிறார்கள். படுக்கையறை வசனங்கள் ஆபாசங்களின்றி அளவாக இயல்பாக கையாளப்பட்டிருக்கிறது.

விசாரணையில், கே பாக்யராஜிற்கே சவால் விடும் அளவு மேற்படி சமாச்சாரங்களை அழகாக விவரிக்கும் நாயகனுக்கு நிச்சயம் சூட்டிங் ஸ்பாட்டில் கே பாக்யராஜே பாராட்டுதல்களை வழங்கியிருப்பார்.

ஒரு துப்பறியும் திரைக்கதையில், சமூக சீர்திருத்த கருத்துக்களடங்கிய திரைக்கதை அமைத்து, நகர்த்திய விதம் அருமை என்றால், தவறுதலாக அடையாளம் காணப்பட்டு போலீஸ் நாயகனை கைது செய்து அழைத்து வரும் அந்த இடைவேளை காட்சி அருமை. ஆண்களின் குறை மற்றும் நிறையோடு, ஆண்களிடமிருந்து பெண்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் போன்ற தெளிவாக பேசியிருக்கும் இயக்குநர் கணவன் – மனைவி என்ற இருவர் உறவில் மூன்றாம் மனிதன் எப்படி நுழைகிறான், என்பதையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.

இயக்குநர் ராம்தேவ் திரைக்கதை மற்றும் காட்சிகளை தொய்வில்லாமல் நகர்த்தி செல்வதோடு, வசனங்கள் மூலமாகவும் கைதட்டல் பெறுகிறார். குறிப்பாக பெண்களை மையப்படுத்திய வசனங்களும், ஆண்மைத்தன்மை பற்றிய வசனங்களும் கைதட்டல் பெறுகிறது.

மணிவண்ணனின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. வேணு சங்கர் மற்றும் தேவ்.ஜி ஆகியோரது இசையில், ராம்தேவ் வரிகளில் பாடல்கள் கேட்கும்படியும், புரியும்படியும் இருக்கிறது. பின்னணி இசையிலும் குறையில்லை.

ஒரு பெண் நினைத்தால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும் என்பது போல், ஒரு குடும்பம் மட்டும் அல்ல அந்த குடும்பத்தின் எதிர்காலமே ஒரு பெண்ணின் கையில் தான் இருக்கிறது என்பதை விட, அவள் வாழும் முறையில் தான் இருக்கிறது, என்ற கருத்தை பாடம் சொல்வது போல் அல்லாமல், நல்ல விறுவிறுப்பான கிரைம் திரில்லர் படம் பார்த்த அனுபவத்தை கொடுக்கும் விதத்தில் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ராம்தேவ்.

மூன்றாம் மனிதன்’  குடும்ப பிரச்சினையில் நுழையவிடாமல் பார்த்துக்கொண்டால் குடும்பத்தின் குதூகலம் என்றுமே குறைவில்லாமல் இருக்கும் என்று சொல்லியிருக்கும் இந்த மூன்றாம் மனிதனை பார்த்து ரசிக்கலாம். .