ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது

mysixer rating 3/5

242

a K.Vijay Anandh review

சினிமா வாய்ப்பு தேடி ஓய்ந்து போய் ஊருக்கே திரும்பி விடலாம் என்று முடிவு செய்யும் நண்பர்கள் சத்யா, விஜய், கோபி, சுதாகர் உள்ளிட்ட 6 பேர், ஐடி கம்பெனியில் சக ஊழியைகள் விட்ட சவாலில் ஜெயிக்க பலான படம் பார்க்க திரையரங்குக்கு வரும் ஹரிஜா மற்றும் யாஷிகா ஆனந்த், அப்புறம் மூன்று பள்ளி மாணவர்கள், ஒரு கள்ளக்காதல் ஜோடி அவர்களுடன் கிரேன் மனோகர் என்று வரிசையாக வந்து ஒரு அமானுஷ்ய திரையங்கில் சிக்கி கொள்ள, மிகவும் பயங்கரமான சம்பவங்கள் இருக்கப்போகிறது என்று பயப்பட ஆரம்பிக்கும் போது, நகைச்சுவை பேய்கள் வந்து திருப்பு முனை ஏற்படுத்திவிடுகின்றன.

சாரா, அப்துல், ரித்விகா என்று  பப்ளிசிட்டி பைத்தியம் பிடித்த தயாரிப்பாளர் முனிஷ்காந்தால் வஞ்சிக்கப்பட்டு இயக்குநர் ஜார்ஜால் ஏமாற்றப்பட்டு சாகடிக்கப்பட்டு அந்த திரையரங்கிலேயே ஆவியாய் சுற்றும் அந்த பேய்கள், முனிஷ்காந்தை கொண்டு வந்துட்டு அனைவரும் போகலாம் என்று நிபந்தனை போட,  அனைவரும் முனிஷ்காந்தை தூக்கிவர கலாட்டா காமெடி நகைச்சுவை கலந்த கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகளுடன் படம் நிறைவடைகிறது.

சினிமா வாய்ப்பு தேடி அலையும் நண்பர்களுக்கு மதுமிதாவே தயாரிப்பாளரும் ஆகிவிடுகிறார், அவரது கள்ளக்காதலுடன் சேர்ந்து. ஹரிஜா, யாஷிகா ஆனந்த் ஆகிய இளம் நாயகிகள் இருந்தும் ஆறு இளம் காளையர்கள் இருந்தும் அதில் எந்த காதல் ஜோடியையும் முன்னிலை படுத்தாமல் இரண்டு திருமணம் ஆன பெண்கள் அவர்களது கள்ளக்காதலன்கள் என்று காட்சிப்படுத்தியிருக்கிறார் இந்த இளம் இயக்குநர் ரமேஷ் வெங்கட். ஏம்பா….?

திகில் படங்கள் என்ன சொல்ல முடியுமோ அதையே யாரும் எதிர்பாரா வண்ணம் நகைச்சுவையாக சொல்லி, இரண்டு மணி நேர பொழுதுபோக்கிற்கு மெனக்கெட்டிருக்கிறார் இயக்குநர்.

பெரிய ஏமாற்றங்கள் இல்லை, டிக்கெட் எடுத்து உள்ளே சென்று விட்டால் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, படம் முடியும் வரை.