a K.Vijay Anandh review
விஜய் சேதுபதி ஹிந்திக்கு போய்விட்டார் என்கிறார்கள். இந்தப் படத்தில் கத்ரீனா கைஃப் தான் தமிழுக்கு வந்திருக்கிறாரோ என்று சொல்லும் அளவிற்கு அனைவருமே தமிழ் நடிகர்கள். ராதிகா சரத்குமார் சண்முகராஜா ராஜேஷ் என்று முக்கியமான கதாபாத்திரங்கள் பலவும் தமிழ் நடிகர்களே.
ஒரு கிறிஸ்துமஸ் மாலையில் ஆரம்பிக்கும் கதை இரவு முழுவதும் பயணித்து அதிகாலையில் முடிகிறது. அதற்குள் இரண்டு கள்ளக்காதல்கள், ஒரு கொலை என்று பரபரப்பு கூட்டுகிறது.
தனது கள்ளக்காதலி ராதிகா ஆப்தேவை கொலை செய்துவிட்டு ஏழு வருடங்களாக ஜெயில் தண்டனை அனுபவித்து விட்டு வீடு திரும்பும் விஜய் சேதுபதி, திரும்பவும் ஒரு கள்ளக்காதலுக்காக தான் செய்யாத கொலைக்காக ஜெயிலுக்குச் செல்ல தயாராகிறார்.
சந்தோஷமாக இருக்கலாம் என்று வீட்டிற்கு முதலில் விஜய் சேதுபதியையும் பிறகு கவின் பாபுவையும் அழைத்து வருகிறார் கத்ரீனா கைஃப், முதல் ரவுண்டில் அவர்களுக்கு மதுபானங்கள் கொடுத்து போதையை வரவழைத்து விட்டு அடுத்த ரவுண்டில் வீட்டிற்குள் கூட்டி வரும் பொழுது பிணமாக அவரது கணவர், போதையில் இருக்கும் இருவருக்கும் நிலைமையை யூகிக்க முடியாமல் போவது சிறந்த திரைக்கதை உக்தி.
அதிலும் காவலுக்கு ஒரு காவலர் பணி அமர்த்தி விட்டு செல்லும் நிலையில் கத்ரீனா கைஃப்பும் விஜய் சேதுபதியும் சேர்ந்து ஆவணங்களை அழிக்கும் வேலை பார்ப்பது கொஞ்சம் தொய்வை ஏற்படுத்தி விடுகிறது.
ராதிகா மற்றும் சண்முகராஜன் ஆகியோர் சம்பந்தப்பட்ட காவல் நிலைய காட்சிகள் கலகல ரகம்.
இயேசு பிறந்த அந்த இரவில், ஆல்பர்ட் விஜயசேதுபதி செய்யாத கூட்டத்திற்காக மறுபடியும் சிறைக்குச் செல்ல ஆயத்தம் ஆவதும் ஒரு பிளாக் ஹியூமர் ரகம்.
அகில இந்திய அளவில் வெளியாகும் என்கிற அளவில் திரைக்கதையை இன்னும் கொஞ்சம் கவனமாக அமைத்திருக்கலாம், மூன்று பேர் கொண்ட கதாசிரியர் குழுவை தரமாக யோசிக்க வைத்திருந்தால் மெரி கிறிஸ்துமஸ் மெச்சத்தக்க படமாக இருந்திருக்குமே , ஸ்ரீராம் ராகவன்!