Mission Chapter 1

Rating 3.5/5

80

a K.Vijay Anandh review

அருண் விஜய் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 25 ஆண்டுகளாக தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒரு நல்ல நடிகர். திரைத் துறையில் தன்னை ஒரு மாஸ் நடிகராக நிலை நிறுத்திக் கொள்ள அவர் எடுத்துக் கொண்ட கடின உழைப்பின் பயன் தடையறத் தாக்க முதல் யானை வரை கொஞ்சம் கொஞ்சமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் மிஷன் சாப்டர் ஒன் ஒரு சிறந்த மாஸ் நடிகருக்கான அங்கீகாரத்தை முழுமையாக வழங்கி இருக்கிறது எனலாம்.

குறிப்பாக லண்டன் சிறைச்சாலையில் நடக்கும் இடைவேளை காட்சி மிகச் சிறப்பாக வடிவடைக்கப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்த் அஜித் விஜய் போன்ற ஆக்சன் சூப்பர் ஸ்டார்கள் வரிசையில் மிகவும் தகுதி வாய்ந்த நடிகராக அந்த காட்சிக்கு மிகவும் பொருத்தமான நடிகராக அருண் விஜய் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்.

சிங்கிள் பாதர் சென்டிமென்ட்  அதிரடி ஆக்சன் சண்டை காட்சிகள் என்று எல்லாவற்றிற்கும் சிறப்பாக பொருந்தி போகிறார் அருண் விஜய். இந்த சாப்டர் ஒன் அவருக்கு மிகச் சிறப்பான சாப்ட்டர்களை ஆரம்பித்து வைக்கும் என்றால் மிகை அல்ல.

நீண்ட நாட்களுக்கு பிறகு லண்டன் சிறைச்சாலையில் ஜெயலராக எமி ஜாக்சனை பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. அவரும் ஹாலிவுட் படங்கள்  பார்ப்பதை போன்ற – குறிப்பாக ஜேம்ஸ் பாண்ட் படங்கள் பார்ப்பது போன்ற அனுபவத்தை தந்து விடுகிறார்.

இந்தியாவிற்கு எதிரான தீவிரவாதிகளை ஒழிப்பதில் சமீப காலங்களில் நிஜ வாழ்க்கையிலேயே நமது இந்திய ராணுவ வீரர்கள் ரா அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உலகம் முழுவதிலும் சிறப்பான சம்பவங்களை அரங்கேற்றி வருகிறார்கள். அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக மிஷன் சாப்டர் ஒன் வெளியாக இருக்கிறது என்றால் மிகை அல்ல.

கோயமுத்தூர் சிறைச்சாலை ஆகட்டும் லண்டன் சிறைச்சாலை ஆகட்டும் அருண் விஜயின் ஆஜான பாகுவான உடல் மொழி அவர் செய்யும் சாகசங்களை முழுமையாக நம்ப வைக்கிறது.

இந்த படம் அருண் விஜய்க்கு மட்டுமல்ல இயக்குனர் விஜய்க்கும் ஒரு திருப்புமனை படமாக அமைந்திருப்பது அவருக்கும் வேறு ஒரு சேப்டர் ஆரம்பித்து இருக்கிறது என்பதை காட்டுகிறது.

மிஷன் சாப்டர்ஸ் தொடரட்டும்….