லோக்கல் சரக்கு

mysixer rating 3/5

280

அடிக்கிறது பூராமே லோக்கல் சரக்கு தானேய்யா என்று புலம்புவது கேட்கிறது.

சரக்கு விற்பனையை பிரதானமாகக் கொண்டு இயங்கும் ஒரு மாநிலத்தில் சரக்குக்கு எதிராக படம் எடுப்பதும் அதை வெளியிடுவதுமே பெரிய புண்ணியம். அந்த புண்ணியம் லோக்கல் சரக்கு தயாரிப்பாளர் வராஹ சுவாமி பிலிம்ஸ் கே. வினோத் குமாருக்கு நிறையவே போய் சேரும்.

சம்பாதித்து நாளை காசு சேர்த்து தங்கையை கல்யாணம் செய்து கொடுத்து மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்வோம் அண்ணன்கள் வாழ்ந்தது அந்தக் காலம். தங்கை வருமானத்தில் சரக்குக்கு காசு வாங்கி சகாவோடு அடிப்பது இந்த காலம். தந்தையிடம் காசு வாங்கி குடிக்கும் அண்ணனாக நடன இயக்குனர் தினேஷ், கெட்ட பெயர் கிடைக்கும் என்று தெரிந்தும் இந்த பாத்திரம் மூலம் ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக துணிந்து சிறப்பாக நடித்திருக்கிறார். வழக்கம் போல ஓசி குடிக்கு ஒரு நண்பன் வேண்டுமே, இருக்கவே இருக்கிறார் யோகி பாபு இருவரும் சேர்ந்து நகைச்சுவையும் செய்கிறார்கள் அவ்வப்போது.

ரொம்ப நல்லவனுக்கு பொண்ணுங்க சீக்கிரமா என்ன? தங்கையிடம் காசு வாங்கி நண்பனுடன் சரக்கு அடிக்கும் தினேஷுக்கு, வந்து சிக்குகிறாள் ஒரு காதலி, படத்தில் ஒரு துணை நடிகையாகவே நடித்திருக்கும் உபாசனா . அவர் ஹைட்டு  என்ன இவர் ஹைட்டு என்ன என்று பார்க்காமல் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்களை நடிக்க வைத்திருப்பதில், இயக்குனர் எஸ் பி ராஜ்குமாருக்கு ஒரு சபாஷ் போடலாம்.

எத்தனை நாட்களுக்கு தான் அண்ணனது போதைக்கு பொது சுமக்கும் கழுதையாக இருப்பது? குதிரையாக வெளியே கிளம்புவோம் என்று முடிவு எடுக்கிறான் தங்கை.

அதற்குப் பின் என்ன ஆனது ? கதாநாயகன் குடியை விடுகிறானா? என்பதே லோக்கல் சரக்கின் மீதி கதை.

அட நீங்க எந்த கதையை வேணாலும் சினிமாவை எடுங்க, சொல்ற திரைக்கதை தான் ரசிகர்களை கட்டி போடும் . லோக்கல் சரக்கு, கட்டிங் போல கட்டி போட்டு இருக்கிறது. இன்றைய ரசிகன், ஃபுல் அடித்தாலும் திருப்தி அடைய மாட்டான். அதை கணித்து இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருக்க வேண்டும்.