ஜெய் விஜயம்

Rating 2.5/5

229

a K.Vijay Anandh review

மொத்தமாக ஒரு பத்து கதாபாத்திரங்கள் இரண்டு வீடுகள் ஒரு காவல் நிலையம் போனால் போகிறது என்று வெளிப்புற படப்பிடிப்பிற்கு சித்தர் காட்டு சிவன் கோயில், இப்படி மிகவும் சிக்கனமான கதை வசனங்கள் சிக்கனமான படப்பிடிப்பு தளங்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு ஒரு நல்ல கருவை திரைக்கதை ஆக்கியிருக்கிறார்கள்.

பட ஆக்கம் சம்பந்தமான படிப்புகள் படிக்கும் மாணவர்கள் நிச்சயம் ஜெய் ஆகாஷ் படங்களை ஒரு ரெஃபரன்ஸ் க்காக பார்த்து குறைந்தபட்ச வசதிகளை வைத்துக்கொண்டு ஒரு முழு நீள திரைப்படத்தை எப்படி கொடுக்கலாம் என்கிற விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அதனை எவ்வளவு நேர்த்தியாக கொடுக்கலாம் என்பது அவரவரின் தனிப்பட்ட திறமையை பொருத்த விஷயம்.

ஆனால் இந்த ஜெய் விஜயம் படத்தைப் பொறுத்தவரை இதனை எழுதி இயக்கி இருக்கும் ஜெய சதீஷன்  நாகேஸ்வரன், பாஸ் மார்க் வாங்கி விடும் அளவிற்கு கொடுத்திருக்கிறார்:

மது குடி முறையற்ற மாது போன்றவை இல்லாமல் ஒரு நேர்மறை விஷயங்களை, நேர்மறையான ஒரு கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெய் ஆகாஷை பாராடத்தான் வேண்டும்.

மனோவியல் மருத்துவராக வரும் அக்ஷயா காந்தமுதன் மற்றும் தனது அம்மாவையும் அண்ணனையும் கொன்றவர்களை தேடிக் கொண்டிருக்கும் தங்கையாக வரும் அர்ச்சயா ராய் உள்ளிட்டோரும் இயல்பாகவே நடிக்கிறார்கள்.

10 வருடங்களுக்கு முன் நடந்த ஒரு கொலையை துப்பு துலக்க 41  கதாநாயகனை 31 வயதிற்கு கொண்டு சென்று உண்மை வெளிவர போடும் நாடகம் சுவாரசியமாகவே இருக்கிறது.

முன்பே குறிப்பிட்டது போல பட ஆக்கத்தில் மற்றும் தொழில்நுட்ப விஷயங்களை பயன்படுத்திக் கொண்ட விதத்தில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டில் இருந்தால் ஜெய் விஜயம் ஒரு புது பெஞ்ச் மார்க் படமாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.