a K.Vijay Anandh review
எந்தக்குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே … அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே… என்கிற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது என்றாலும், இன்றைய குழந்தைகளுக்கு தாய் தந்தையரின் அரவணைப்பை தாண்டிய ஒரு விழிப்புணர்வு தேவைப்படுகிறது என்று சொல்லும் படமாக சிக்லெட்ஸ் வெளியாகி இருக்கிறது.
வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த ரியா, அபி, மற்றும் அனுஷா ஆகிய மூவரும் முதல் வகுப்பில் இருந்து பிளஸ் டூ வரை ஒன்றாக படிக்கும் உற்ற தோழிகள், பருவ வயதை நெருங்க நெருங்க கொஞ்சம் தடுமாறுகிறார்கள். முதிர்ச்சி பெற அந்த வயதில், தாங்கள் தேர்ந்தெடுத்த ஒருவனுடன் அவனை முழுமையாக நம்பி தங்களை ஒப்படைப்பது என்கிற முடிவுக்கு வருகிறார்கள்.
வீட்டில் பொய் சொல்லிவிட்டு கிளம்பும் அவர்கள், செல்லும் வழியில் மனோபாலாவிடம் காண்டம் வாங்கிவிட்டு மொபைலை விட்டுச் சென்ற வகையில் வீட்டில் மாட்டிக்கொள்கிறார்கள்.
அதிர்ச்சி அடையும் மூவரின் பெற்றோரும் தங்கள் குழந்தைகளை பத்திரமாக மீட்கிறார்களா என்பதே விறுவிறுப்பான இரண்டாவது பாதி.
தோள் உயரத்திற்கு வளர்ந்த குழந்தைகளை, அதுவும் செல்லமாக வளர்ந்த பெண் குழந்தைகளை கொடூரமான கண்டிப்புகள் காட்டி வளர்க்க முடியாத பெற்றோர்களின் பரிதவிப்பை மூன்று பேரின் பெற்றோர்களும் காட்டும் இடங்கள் அருமை. சுரேகா வாணி, ஸ்ரீமன் மற்றும் ராஜகோபால் சிறப்பாக நடித்து இருக்கின்றார்கள்.
ஐயர் வீட்டு பாட்டி ஜானக , வந்து உண்மையைச் சொல்லி துப்பு துலக்கும் இடங்கள் அருமை. இரண்டாவது பாதியை அந்த பாட்டியே விறுவிறுப்பு ஆக்குகிறார்.
மூன்று நாயகிகளும் அவருடன் ஜோடியாக நடித்திருப்பவர்களும் குறிப்பாக மதன் மற்றும் சிக்குவாக நடித்திருப்பவர்கள் அருமை. கரிஷ்மா மஞ்சுரா அமிர்தா ஆகிய மூவருமே ஆபாசங்கள் இன்றி கவர்ச்சி காட்டிய விதங்களிலும் என்னதான் டேட்டிங் க்கு சென்றாலும், ஒரு விழிப்புணர்வு வந்து திருந்தும் இடங்களிலும் மிகச்சிறப்பாக நடித்து இருக்கின்றனர்.
பாலின சிறுபான்மையினருள் ஒரு பிரிவினராக வரும் லெஸ்பியன் வகையை சேர்ந்தவர்கள் மனோதத்துவ சிகிச்சை அல்லது முறையான சிகிச்ச களின் மூலம் இயல்பான நிலைக்கு கொண்டு வர முடியுமா என்பதை படித்தவர்கள் கூற வேண்டும்.
சிக்லெட்ஸ் போன்ற படங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வந்து கொண்டே இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். அது நமது வீட்டு குழந்தைகளுக்கான ஒரு எச்சரிக்கை மணி என்றால் மிகை ஆகாது.
இந்தப் படத்தை இயக்கியிருக்கும் முத்துவிற்கு பாராட்டுக்கள்.