வடக்குப்பட்டி ராமசாமி

mysixer rating 3.5/5

106

a K.Vijay Anandh review

ஏய்… நீ ஊருக்குள்ள சாமி இல்லனு சொல்லிட்டு இருப்பானே அந்த ராமசாமியா ? என்று கேட்கும் பொழுது, நான் அந்த ராமசாமி இல்ல என்று சொல்லுகிற வசனத்தை பஞ்ச் டயலாக வைத்து பட்டையை கிளப்பி இருக்கிறார் சந்தானம். இன்றைய தேதியில், அந்த ராமசாமி மண்ணு என்று சிலரால் சொல்லிக் கொள்கிற நேரத்தில் இப்படி ஒரு துணிச்சல் இப்படி ஒரு வசனம் வைத்து படம் எடுத்ததற்கும் , அதை அந்த ராமசாமியை போற்றுபவர்களை வைத்தே வெளியிடுவது என்பது ஒரு ஆச்சரியமான விஷயம் தான். கலெக்ஷன் முக்கியமா ? கொள்கை முக்கியமா ? என்று பார்த்தால் கலெக்ஷன் தான் முக்கியம் என்பது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.

நாயகியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தாலும் சந்தானத்துடன் பெரும் பகுதியை ஆக்கிரமித்து இருப்பது மாறன் , சேசு, ஜான் விஜய்,  ரவி மரியா மற்றும்  கூல் சுரேஷ் ஆகியோர்தான். காட்சிக்கு காட்சி நகைச்சுவை என்பது போய், பிரேமுக்கு பிரேம் நகைச்சுவை வைத்திருக்கிறார்கள். கூல் சுரேஷ் பேசினாலே அது களமாக இருக்கும் பேச முடியாமல் பேசுவதை. கல்கி எடை கூடமாக மொழிபெயர்ப்பதை கேட்டு விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியதாக இருக்கிறது. ஜான் ரவி மற்றும் ரவி மரியா செய்யும் அலப்பறைகள் வேறு ஒரு ரகம். மாறன் சேஷுவைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ? இரண்டாவது பாதியில் சேஷு போடும் பரதநாட்டியம் வேற லெவல். படம் முழுவதும் சரக்கு போட்டுக் கொண்டே வருவதால் இவர் ஆடுவது கூட போடுவது போல போதை தந்து இருக்கிறது.

ஆர்மி மேஜராக நிழல்கள் ரவி. கே பாக்யராஜ் படத்தில் வரும் ஜெரைல . கரியப்பாவிற்கு அடுத்து நீண்ட நாட்கள் நிலைத்து நிற்கப் போகும் ஒரு ராணுவ மேஜர் கதாபாத்திரம்.

இவர்களுடன், youtube பிரபலம் பிரசாந்த், ஒரு வளர்ந்த குழந்தையாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

எம் எஸ் பாஸ்கர் வழக்கம் போல தன் பங்கினை சிறப்பாக செய்து இருக்கிறார். மொட்டை ராஜேந்திரன் கூட்டாளிகள் செய்யும் காமெடிகளும் நன்றாக வந்திருக்கின்றன, வட்டாட்சியர் ஆக வரும் தமிழ் மற்றும் காவல்துறை அதிகாரியாக வரும் ரியாஸ் ஆகியோரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

எல்லோரும் காமெடி செய்யும் பொழுது சந்தானம் என்ன செய்கிறார் ? உண்மையில் மற்றவர்களை காமெடி செய்ய விட்டு ரசிகர்களைப் போல படம் முழுவதும் அவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.

இவர் சாமி கும்பிடுபவர்களை கலாய்க்கிறாரா அல்லது சாமி கும்பிடுபவர்கள் பக்கம் இருக்கிறாரா என்கிற ஒரு குழப்பமான திரைக்கதையோடு கதை நகர்ந்தாலும், இறுதியில் கண்ணாத்தாவை சரணடையும் சந்தானம் என்பதாக காட்டி இருப்பது அருமை.

வடக்குப்பட்டி ராமசாமி, சமூக வலைத்தளங்களில் கழுவி ஊற்றப்பட்டு கொண்டிருக்கும் அந்த ராமசாமி அல்ல. டிக்கெட் வாங்குபவர்களை குறைவில்லாமல் சிரிக்க வைத்து அனுப்பும் ராமசாமி.