ஒரு கே.விஜய் ஆனந்த் விமர்சனம்
ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது ஆரம்பித்து, இன்று மு.க.ஸ்டாலின் முதல்வராக இருக்கும் போது வெளிவந்திருந்தாலும், தாமதம் தெரியாத படி பல ஜிக்ஜாக் வேலைகளை செய்து, சமீபத்தில் சுடச்சுட எடுக்கப்பட்ட படம் போல வெளியாகியிருக்கிறது எப்போதும் ராஜா.
வழக்கம்போல, இரட்டையர்கள் என்றாலே தமிழ் சினிமாவில் ஜெயிக்கும் பார்முலா தான் அதை சிக்கென்று பிடித்துக்கொண்டு சீரியசான காவல்துறை அதிகாரியாக அண்ணன், வாலிபால் விளையாட்டு வீரனாக தம்பி என்று எப்போதும் ராஜாவை கொடுத்திருக்கிறார்கள்.
காவல்துறை அதிகாரியாக இருந்தாலும், அம்மாவிற்கு கொடுத்த வாக்குப்படி ஏழைப்பெண் ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் அண்ணன், மல்டிமில்லியனர் பெண் தன்னை காதலித்தாலும் டில்லியில் தன்னை தடுக்க வந்த வில்லியையும் பதம் பார்க்கும் தம்பி என்று இரு வேடங்களிலும் வித்தியாசம் காட்டியிருக்கிறார் வின்ஸ்டார் விஜய்.
வாழைப்பழம் என்றாலே குலையோடு கொத்தி செல்லும் நண்பனாக வரும் செல்வாவினை – கார்த்திக் உள்ளிட்ட கொடூர வில்லன்கள் வேட்டையாடியது கண்டு பொறுக்க முடியாமல் பழிவாங்குகிறார் பந்தாட்ட நாயகன்.
அவனவன் வேலையை மட்டும் பாருங்கடா , தேசம் தானாக முன்னேறும் – அடுத்தவனை கெடுப்பதை ஒரு வேலையாக வைச்சுக்காதீங்கடா என்பதாக முடித்திருக்கும் விதம் அருமை.