அமீகோ கேரேஜ்

mysixer rating 3/5

61

a K.Vijay Anandh review

திரைப்படத் துறைக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களை இந்த துறை கைவிடாது. மாஸ்டர் மகேந்திரன், முதல் கலகலப்பான சிவகார்த்திகேயன் போலவும் இரண்டாம் பாதியில் ஆக்சன் அருண் விஜய் போலவும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.  உடல் மொழிகளில் இன்னும் நிறைய மெனக்கிட வேண்டி இருக்கிறது என்றாலும் அமீகோ கேரேஜ் அவருக்கு ஒரு நல்ல ஆரம்பமாக இருக்கட்டும, இருக்கும்.

ஏதோ ஒரு தருணத்தில் ஈகோ பார்த்து நாம் எடுக்கும் தவறான முடிவுகள் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டு விடுகின்றன  என்பதை மிகவும் இயல்பாக நம்பத் தக்க வகையில் சொல்லி இருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நாகராஜன்.

டாஸ்மாக்கில் வாகன நிறுத்தத்தில் ஒரு பிரச்சனை, அந்த இடத்தில் உஷாராக இருந்திருக்கலாம் – மைதானத்தில் அமீகோ கேரேஜ் ஆனந்தாக வரும் ஜி எம் சுந்தரிடம் இதுவும் சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று இறுதி காட்சியில் யோசிக்கும் மகேந்திரன், கொஞ்சம் அதற்கும் முன்னதாக சென்று பிசிக்ஸ் ஆசிரியரை அவமானப்படுத்தாமல் இருந்திருக்கலாம் என்று யோசிப்பதாக ஒரு காட்சி வைத்திருக்க வேண்டும். ஆசிரியரிடம் சரியாக நடந்து கொள்வது என்கிற கருத்தை விதைத்திருக்க வேண்டும்.

மற்றபடி மாஸ்டர் மகேந்திரன் உடன் வரும் நண்பர்களாகட்டும் அமீகோ கேரேஜில் நடக்கும்  இயல்பான உரையாடல்கள் மற்றும் சம்பவங்கள் ஆகட்டும் சுவாரசியமாக இருக்கின்றன.

17 வயதில் திருமணம் ஆகி அதே வயதில் விதவையும் ஆகிப்போன தமிழ் கதாபாத்திரத்தில் வரும் ஆதிரா சிறப்பாக நடித்திருக்கிறார், இந்தப் படத்திற்கு அவரும் ஒரு பெரிய பலம்.

வில்லன்களாக வரும் தசரதி மற்றும் முரளிதரன் சந்திரன் ஆகியோரும் சிறப்பாக நடத்தி இருக்கிறார்கள். ஜி எம் சுந்தர் கேட்கவே வேண்டாம் வழக்கம் போல சிறப்பாக நடித்திருக்கிறார் சிறப்பாக நடத்தி இருக்கிறார்

காதல் எங்கு எப்பொழுது யாருடன் தோன்றுகிறது என்று தெரியாதோ அதைப்போலவே பகையும். அதுவும் யாருடன் எப்பொழுது தோன்றுகிறது என்று தெரியாமல் செய்த தவறுக்காக வாழ்க்கை முழுவதும் உயிருக்கு பயந்து ஓடிக்கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது என்கிற கருத்தை அழகாக பதிவு செய்திருக்கிறது அமீகோ கேரேஜ் .