கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள்

mysixer rating 3/5

239

a K.Vijay Anandh review

சில ஆண்டுகளுக்கு முன்னால் பொள்ளாச்சி  சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற அப்பாவை பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமை ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது எனலாம். பொள்ளாச்சி பொல்லா ஆட்சிக்கு சாட்சி என்று சொல்லி ஓட்டு கேட்டவர்கள் இன்று ஆண்டு கொண்டிருக்கும் நிலையில், அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைத்ததா? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும் உரிய நிவாரணங்களும் கிடைத்தனவா ? என்கிற கேள்வி இருந்து கொண்டே தான் இருக்கின்றது.

இந்த படம் அந்த வன்கொடுமையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்று இயக்குனர் நேசம் முரளி அறிமுகம் செய்த பொழுது , ஐயய்யோ, இதையெல்லாம் படமாக எடுக்க போகிறார்களா? என்று யோசிக்க வைத்தது.

ஆனால், கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள் என்கிற தலைப்பில் முழு படமாக பார்த்தபோது, வக்கிரமான காட்சிகள் எதுவுமே இல்லாமல் குடும்பத்தோடு பார்த்து ரசிக்கதற்காக வகையில் இந்த படத்தை எடுத்திருக்கிறார். குறிப்பாக, ஒரு ஐஏஎஸ் படிக்கும் கணவன் கதாபாத்திரத்தை வைத்து தவறு செய்தவர்களை இறுதியில் காவல் துறை தண்டிப்பதாக காட்சிப்படுத்திருப்பது பாராட்டத்தக்க திரைக்கதை.

ஒரு சில வக்கிர மீடியாக்கள் பெல்ட்டில் அடி வாங்கி ஆடைகளையும் காட்சிகளை பொறுப்புணர்வு இன்றி பிரசுரித்து தங்களது டிஆர்பிஐ ஏற்றிக்கொண்டு நிலையில், அதே காட்சியை துளி ஆபாசம் இன்றி கிளைமாக்ஸ் இல் வைத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் நேசம் முரளி.

பெண் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டும்  என்கிற அறிவுரையை மட்டும் வணங்காமல்,  ஐஏஎஸ் படிக்கும் சிவ நேசன் மூலம் ஆண் குழந்தைகளை இப்படி  பொறுப்பாக வளர்க்க வேண்டும் என்கிற கருத்தையும் சேர்த்தே விதைத்திருக்கிறது இந்தப் படம்.

பட ஆக்கத்தில் குறைகள் இருந்தாலும், காவல்துறை நீதித்துறை ஆகியவற்றை அரசியல் செல்வாக்கினால் எப்படி அதிகார வர்க்கத்தினர் தங்கள் இஷ்டத்திற்கு வளைக்கிறார்கள் என்பதையும் தவறு செய்தவளை காப்பாற்ற சமூகத்தின் பெயரில் பாதிக்கப்பட்டது தனது சமூகப் பெண்கள் என்றாலும் அவர்களிடம் சமரசம் செய்யும் விதமாக பேசும் கொடுமையையும் காட்டிய விதத்தில் இந்த படம் நிச்சயம் பாராட்டத்தக்கதே!

 

பி.கு.

குறிப்பாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த வாரம் வெளி வந்திருக்கும் கற்பு பூமியில் சில கருப்பு ஆடுகள், ஆலகாலம் மற்றும் ஒரு தவறு செய்தால் ஆகிய மூன்று படங்களுமே தமிழகத்தை கடந்த 60 ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருப்பவர்களின் நிர்வாக சீர்கேடுகளையும்  அதன் மூலம் ஏற்படும் கலாச்சார சீர்கேடுகளையும் கோடிட்டு காட்டும் படங்களாக அமைந்திருப்பது ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.. இவர்களுக்கு மாற்று வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் பெரும் பொருட்செலவில்  தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ளாமல் இந்த மூன்று படங்களையும் பொதுமக்களுக்கு இலவசமாக போட்டுக் காட்டினாலே போதும் என்று சொன்னால் அது மிகை அல்ல.