சபரி

mysixer rating 3/5

49

a K.Vijay Anandh review

வரலட்சுமி சரத்குமார் கணேஷ் வெங்கட்ராம் மைம் கோபி மற்றும் சஷாங்க் ஆகிய நான் கே  பேர்களை வைத்து விறுவிறுப்பான ஒரு சைக்காலஜிக்கல் திரில்லர் ஆக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் அணில் கட்ஸ்.

என்னதான் வரலட்சுமி சரத்குமாரை காதலித்து திருமணம் செய்தாலும் கடைசியில் கார்ப்பரேட்டில் உயர்ந்த பதவி வந்த பிறகு அவருக்கே வில்லன் ஆகிப் போகிறார் கணேஷ் வெங்கட்ராமன்.

கல்லூரி பருவத்தில் காதலித்த வரலட்சுமி சரத்குமாருக்கு கடைசிவரை ஒரு நல்ல நண்பராகவே இருக்கிறார் சஷாங்க்.

குழந்தைகளை கடத்தி விற்கும் கொடூர வில்லனாகவும் தனது குழந்தை பறிபோன நிலையில் மன நல காப்பகத்தில் அடைக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் தான் இறந்ததாக ஆவணங்களை திருத்தி உயிரோடு இருந்து வரலட்சுமியை துரத்தும் வில்லனாக சிறப்பாக நடித்திருக்கிறார் மைம் கோபி.

தனக்குப் பிறக்காவிட்டாலும் தான் பாசங்களை கொட்டி வளர்த்த தனது குழந்தையை பிரிய மனமில்லாமல்,  அதனை காப்பாற்ற போராடும் சுயமரியாதை கொண்ட சிங்கிள் மதராக சிறப்பாக நடித்திருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.

சபரி, சப்போர்ட் செய்ய வேண்டிய தாய்மையை பெருமை !