a K. Vijay Anandh review
எவனோ ஒருத்தன் காண்ட்ராக்ட் எடுப்பதற்காக அரசு இயந்திரங்களின் அதிகார வர்க்கம் அப்பாவி பெண்களை எப்படி குறிவைத்து வேட்டையாடுகிறது என்கிற பயங்கரமான, பொதுமக்கள் அவ்வளவாக படிக்காத பக்கங்களை சிறப்பாக சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
யாஷிகா ஆனந்த், மிகவும் குறுகிய காலத்தில் இவர் மீது மிகவும் நம்பிக்கை வைத்து பெரும் சுமையை ஏற்றி வைக்கும் அளவிற்கான கதைகளுடன் தயாரிப்பாளர்கள் தேடிப் போகிறார்கள் என்பதே யாஷிகா ஆனந்தின் திறமைக்கு சான்று.
இந்தப் படத்திலும் அவர் ஒரு பிரபல நடிகை கதாபாத்திரத்திலேயே வருகிறார் என்றாலும், அவரும் பெண் தானே அவருக்கும் எமோஷனல் கனெக்சன்ஸ் இருக்கும் என்பதை அவரது தங்கையை வைத்து மிகவும் அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள்.
இறுதியில் மகாகாளி அவதாரம் எடுத்து, தங்கையை சீரழித்தவனை மட்டுமல்ல அங்கு வரும் அப்பாவி பெண்கள் அத்தனை பேரையும் சீரழிப்பவர்களை வேட்டையாடுகிறார் யாஷிகா ஆனந்த்.
தான் தங்கியிருக்கும் அறைக்கே வில்லனை வரவழைத்து அவனுடன் யாஷிகா ஆனந்த் மோதும் காட்சிகள் அருமை.
அவருக்கு உதவி செய்பபவர்களாக வரும் | ஜார்ஜ் உள்ளிட்ட நடிகர்கள் தங்கள் பங்கு சிறப்பாக வழங்கி இருக்கிறார்கள்.
பிரஜின், படத்தின் ஆரம்பக் காட்சியிலும் இறுதி காட்சிகளும் வந்தாலும், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த திரைக்கதையில் தனக்கு கிடைத்த மிகச் சிறிய வாய்ப்பை கனகச்சிதமாக பயன்படுத்தி நன்றாக நடித்து இருக்கிறார்.
முதலமைச்சராக வருபவர் குற்றச் செயலின் வீரியம் கருதி சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் என்கவுண்டர் செய்வதற்கு உத்தரவிடுவது சுவாரசியமான அம்சம்.
பரிச்சியம் இல்லாதவர்களுக்கு தொலைபேசி எண்களை கொடுப்பதையும் | தெரியாமல் செய்த தவறில் இருந்து தப்பிக்க, தனியாகச் சென்று மாட்டிக்கொண்டு மேலும் நிலைமையை சிக்கலாக்கி கொள்வதையும் மிகவும் தெளிவாக காட்சிப்படுத்தி மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் செல்வம் மாத்தப்பன்.
பல நேரங்களில் தேர்வுக்கு படிக்காத பக்கங்களில் கேள்வித்தாள்களின் விடைகள் ஒளிந்து இருப்பது போல, படிக்காத பக்கங்கள் என்ற பெயர் தாங்கி வெளிவரும் இந்த படத்தில், பெண் குழந்தைகளுக்கு நிறைய விழிப்புணர்வு பாடங்கள் இருக்கின்றன.