இதுபோன்ற ஒரு பெரிய பட்ஜெட் படங்களுக்கு ஒரு இயக்குநராக தயாரிப்பாளரை ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும் என்றால் பெரிய நடிகர்கள் இருக்க வேண்டும், படம் வெளிவர வேண்டும் என்றால் பெரிய நடிகர்கள் இருக்க வேண்டும் என்கிற நிலைமையை மாற்றி கதையும் சுவராசியமாகச் சொல்லும் திரைக்கதையும் மற்ற பிற தொழில்நுட்ப அம்சங்களும் இணைந்தால் துணை நடிகர்களாக நடித்துக் கொண்டிருப்பவர்களை வைத்து கூட இப்படிப்பட்ட விறுவிறுப்பான படங்களை கொடுக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் இயக்குனர் முகமது ஆசிப் ஹமீத் .
டொனால்ட் மற்றும் செபஸ்டியன் ஹாலோவே என்கிற இரண்டு கதாபாத்திரங்களை ஏற்று நடிகர் நாசர் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். அதாவது ஒன்று நேர்மறையான கதாபாத்திரம் மற்றொன்று எதிர்மறையான கதாபாத்திரம்.
ஹம்ச ரகுமான் என்கிற காவல்துறை அதிகாரிகளிடத்தில் ஜெயக்குமார் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கிட்டத்தட்ட இவரை வைத்து தான் கதை ஆரம்பிக்கிறது.
மனித நரபலி போன்ற கூட மிகவும் அழகாக சொல்லி இருக்கிறார்கள்.
ஸ்வயம் சித்தா, வினோத் கிஷன், வினோதினி, அர்ஜய், தலைவாசல் விஜய் என்று துணை கதாபாத்திரங்களில் பார்த்து பழகிய நடிகர்கள் இந்தப் படத்தில் தாங்கள் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரங்களில் அற்புதமாக தங்களை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
பிக்ஸ் இட் அண்ட் போஸ்ட் பி எ ப் எக்ஸ் இனியவன் உடைய உழைப்பு நிச்சயமாக பேசப்படும்.
தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளர் கிரி மர்பி மற்றும் ஆர்ட் டைரக்டர் தோட்டதரணியும் ஆகச் சிறந்த பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். பூர்ணிமாவின் ஆடை வடிவமைப்பும் இந்த படத்திற்கு பேருதவி புரிந்திருக்கிறது.
அகாலி, ஹாலிவுட் தரத்தில் எடுக்கப்பட்ட ஒரு தமிழ் சினிமா .