இந்தியன் II

mysixer rating 3.5

75

a K Vijay Anandh review

லஞ்சம் இல்லாத தேசத்தை உருவாக்கவேண்டும் என்கிற சுதந்திரப்போராட்ட வீரரும் நேதாஜி படையில் பணியாற்ரியவருமான இந்தியன் என்று அழைக்கப்படுகின்ற சேனாதிபதி யின் கனவை நனவாக்க , லஞ்சம் வாங்கும் தங்களது அப்பா, அம்மா, மாமா , பங்காளி என்று அரசிடம் போட்டுக்கொடுக்கு அதனால் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார்கள். எதிர்பாராத விதமாக சித்தார்த்தின் தாய் தற்கொலை செய்துகொள்ள, இந்தியன் பேச்சைக்கேட்டு தவறு செய்துவிட்டோமோ என்று வருந்தி அவர் மீதே கோபப்படுகிறார்கள். கம்பேக் என்று போட்ட ஹாஷ்டேக்குகள் கோபேக் ஆக மாறிவிடுகிறது. தவறானவர்கள் கைகளில் இருக்கும் செய்திச்சேனல்கள் இதனை ஊதிப்பெரிதாக்க,  ஊரே திரண்டு இந்தியனை விரட்டுகிறது.

தேசத்தின் அவல நிலையை எண்ணி வருந்தி, இந்த சுதந்திரம் எப்பாடுபட்டு வாங்கினது தெரியுமா ? என்று கேள்விகேட்டு, வீரசேகர சேனாதிபதியின் கதையை சொல்ல ஆரம்பிக்கிறார். அதற்கு 2025 வரை காத்திருக்க வேண்டும்.

முழுமையான ஒரு சிறந்த படைப்பாக இந்தியன் 2 இல்லாவிட்டாலும், நல்ல விஷயங்களை முன்னெடுக்கும் போது ஏற்படும் இழப்புகள்,  அதை கைவிட்டு கெட்டவிஷயங்களுக்கே பழகிக்கொள்வோம் என்கிற நிலைக்கு மனிதர்களை கொண்டுவந்துவிடுகிறது – அதற்கு இடம்கொடுக்காமல் இழப்புகளை சகித்துக்கொண்டு நல்ல விஷயங்களுக்கு – நல்ல மாற்றங்களுக்கு முயன்று கொண்டே இருக்கவேண்டும் என்கிற உளவியலை விதைத்த விதத்தில் ஷங்கரை பாராட்டாலாம்.

மேலும், இந்தியன் முதல் பாகத்தில் அப்பா – மகன் என்று இரண்டு வேடங்கள், மகனுக்கு இரண்டு காதலிகள் அவர்களுடன் அடிக்கடி டூயட் என்று படம் முழுக்க கமல்ஹாசனே வந்துகொண்டிருப்பார். அப்பா , லஞ்சம் வாங்கும்  தமிழக அரசு அதிகாரிகளை கொன்று தீர்ப்பார்.

இந்த பாகத்தில், இந்தியன் கமல்ஹாசனின் பங்கு மிகவும் குறைவு. படம் முழுவதும் இளைஞர்கள் , அதாவது கமல்ஹாசன் அல்லாத இளைஞர்கள் சித்தார்த், பிரியாபவானி சங்கர், ரகுல் பிரீத் சிங், ஜெகன் மற்றும் எஸ் ஜே சூர்யா , பாபி சிம்ஹா என்று இன்றைய தலைமுறை நடிகர்கள் ஆக்ரமித்திருக்கிறார்கள். என்னதான் சித்தார்த்தை விமர்சனம் செய்தாலும், அவர் ஒரு புத்திசாலி, படம் முழுவதும் அவரது ஆசாபாசங்களை சுற்றியே நடப்பதாக கவனமாக பார்த்துக்கொண்டிருக்கிறார்.

சமுத்திரக்கனியை நல்லவராக காட்டியிருந்தால், படம் மிகவும் டேமேஜ் ஆகியிருக்கக்கூடும், ஷங்கர் அதில் தப்பித்துவிட்டார்.

100 வயதிற்கு மேல் ஒருவர் வந்து தான் தேசத்தை காப்பாற்றவேண்டும் என்பது ஒன்றும் நம்ப முடியாத விஷயமல்ல.  நல்ல வாழ்க்கை முறைகளுடன் முறையான யோகப்பயிற்சிகள் அதனை சாத்தியமாக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அப்படிப்பட்ட யோகக்கலைக்காக ஒரு நாளை ஒதுக்கினார் மோடி. ஆனால், மோடிக்கு கோபேக் சொல்கிறோம். நடக்கும் அ நீதிகளை தட்டிக்கேட்க யாராச்சும் வரமாட்டார்களா../? என்று ஆதங்கப்படுகிறோம்.. அண்ணாமலை என்று ஐபிஎஸ் படித்துவிட்டு அரசியலுக்கு ஒரு இளைஞன் வந்தால் ஆடு ஆடு என்று அசிங்கப்படுத்துகிறோம்.  உங்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு என்ன தான் டா பிரச்சினை..? சரி குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க சட்டங்களை மாற்றினால், அரசியலமைப்புச்சட்டத்தையே அழிக்கிறார்கள் என்று கூவவேண்டியது..!

இந்த முறை, கமல்ஹாசன் வெறும் நடிகர் மட்டுமல்ல அரசியல்வாதியாகவும் ஆகிவிட்டபடியால்  கூட்டணி தர்மத்திற்காக தமிழக அரசு அதிகாரிகளை விட்டுவிட்டு, குஜராத், பஞ்சாப் பக்கம் சென்று இரண்டு பெரிய முதலைகளை வேட்டையாடுகிறார்.

தமிழக மாணவன் ஒருவனின் கல்விக்கடனுக்கும் குஜராத் தொழிலதிபருக்கும் என்ன சம்பந்தம்../? ஷங்கர்..? தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரி லஞ்சம் வாங்கினதால் தற்கொலை செய்துகொண்ட அப்பாவி பெண்ணிற்காக பஞ்சாப்க்காரன் என்ன செய்வான்..?

இந்தியன் முதல் பாகம் வந்த நேரத்தில் சமூகவலைத்தளங்கள் இல்லை, என்ன வேண்டுமானாலும் பேசிவிடலாம். இன்று, அத்தனையும் அவரவர் விரல் நுனியில்.

தொழில் நுட்ப ரீதியாக அனிருத்தும் ரவிவர்மனும் ஷங்கரை கைவிட்டுவிட்டார்களோ என்று நினைக்கத்தோன்றுகிறது.

இந்தியன் 2,  தவறு செய்பவர்கள் தங்கள் தாய் தந்தையரே ஆகினும் அவர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும் என்கிற சிந்தனையை இளைஞர்கள் மனதில் விதைத்த விதத்தில் பாராட்டலாம் !

முகு: இந்தியன் – 3 , நேர்மையான உதவி இயக்குநர்களை வைத்துக்கொண்டு பலமுறை போட்டுக்காட்டி குற்றம் குறைகளை களைந்து வெளீயிட்டால் பிரமாண்ட வெற்றி சாத்தியம் !