Teenz

mysixer rating 5/5

106

a K Vijay Anandh review

ஒன்று,

மருத்தவம் மட்டும் தான் மேற்படிப்பு, அதற்கு நீட் பெரிய தடைக்கல் என்கிற பொய்ப்பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாணவர்கள் மனதில் வான் இயற்பியல் Astrophysics ஐ ஆழமாக விதைத்திருக்கிறார் புதுமைப்பித்தன் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். அப்துல் கலாம் இருந்து, இந்தப்படத்தை பார்க்க நேர்ந்தால், பார்த்திபனை ஆரத்தழுவியிருப்பார்.

இரண்டு,

இதுகாறும் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருவதாக மட்டுமே படம் வந்துகொண்டிருந்த நிலையில், முதன்முறையாக  பூமியில் இருந்து அதுவும் ஒரு புத்திசாலி தமிழ் சிறுவனை வேற்றுக்கிரகத்திற்கு அனுப்பி வைக்கும் அந்த சிந்தனை அபாரம், உண்மையில் தமிழ்த்திரையுலக படைப்பாளிகள் மட்டுமல்லாது இந்திய திரைப்படத்துறையினர் அத்தனை பேரும் இந்தப்படத்தை அவரவர் மொழில் அனைத்து ரசிகர்களும் பார்க்கும் வண்ணம் செயல்படவேண்டும்.

மூன்று,

அமானுஷயம்  மற்றும் அறிவியலை அற்புதமாக கலந்து பிரமாண்ட வெற்றிகளை குவிக்கும் ஹாலிவுட் படங்களுக்கு சற்றும் சளைத்ததல்லை இந்த டீன்ஸ். ”பூமியை காப்பாற்ற” ஹாலிவுட் படைப்பாளிகளாலும் நடிகர்களாலும் மட்டுமே முடியும் என்கிற நிலையை மாற்றி, இந்திய விஞ்ஞானிகளாலும் சாதாரண பள்ளிக்கூட பையானுலும் கூட முடியும் என்று அற்புதமாக சொல்லியிருக்கிறார்.

நான்கு,

டீன்ஸ் நல்ல கற்பனை நல்ல முயற்சி நல்ல படைப்பு. இதன் தொடர்கள் வெளிவரவேண்டும், வெளிவந்துகொண்டே இருக்கவேண்டும். படத்தில், தந்தைக்குப்பின் மகன் என்று 153 வருட கனவு நிஜமானது போல, பார்த்திபனின் இந்தப்படைப்பின் தொடர்களை  கீர்த்தனா மற்றும் அவரது பிள்ளைகள் என்று கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

ஐந்து,

திங்கள் கிழமையா அட வகுப்புகள் போரடிக்கும் என்று கட் அடித்த மாணவர்களுக்கு அனாந்தரமான காட்டில் அஸ்ட்ரோ பிசிக்ஸ் எடுக்கும் பார்த்திபனை ரசிக்க முடிகிறது.

ஆறு,

குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களது நேர்த்தியான நடிப்பின் மூலம் வசீகரித்திருக்கிறார்கள். அய்யங்காளியாக வரும் தீபன் சம்பந்தப்பட்ட காட்சிகள் தியேட்டரில் கரகோஷத்தை வரவழைத்திருக்கின்றன.

டீன்ஸ் அணி சிக்ஸர்களாக அடித்து ரசிகர்களை மகிழ்விக்கும் என்றால் அதில் சந்தேகமேயில்லை.

மாணவர்கள் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய படம், ஆசிரியர்களும் தான் !