வல்லான்

mysixer rating 3/5

64

a K Vijay Anandh review

சிறுபான்மை காவலர்கள் ஆண்டு கொண்டிருக்கும் இந்த மண்ணில் ஒரு சிறுபான்மை டிரஸ்ட் இல் நடக்கும் பொருளாதார முறைகேடுகளை, நன்கொடைகளாக அவர்களது வங்கிக் கணக்கில் குவியும் அப்பாவி மக்களின் பணம் எப்படி பிரயோஜனம் இல்லாத விஷயங்களுக்கு செலவழிக்கப்பட்டு வீணாகிறது ? அந்த பணத்தால் அவர்கள் குடும்பங்களில் எவ்வளவு அட்டூழியங்கள் நடக்கின்றது ? அதனால் அவர்களது வீடுகளில் பணியாற்றும் அப்பாவி பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் ?இவர்களோடு சம்பந்தமே இல்லாத ஒரு பெண்ணும் எப்படி பாதிக்கப்படுகிறாள் ? இவர்களது டிரஸ்டை பயன்படுத்தி ஊழல் அரசியல்வாதிகள் அவர்களது பணத்தை எப்படி வெள்ளையாக்குகிறார்கள் ? போன்றவற்றை  மிகவும் துணிச்சலாக கையாண்டு இருக்கிறார், இயக்குனர் வி ஆர் மணி சேயோன்.

அப்படி ஒரு கிறிஸ்துவ டிரஸ்ட்க்கு சம்பந்தமே இல்லாத படத்தின் நாயகி தான்யா கொல்லப்படுகிறாரா ? காணாமல் போகிறாரா ? என்கிற கதாநாயகன் சுந்தர் சி யின் விறுவிறுப்பான புலனாய்வு படமாக வல்லான் விரிகிறது.

கிரைம் பிராஞ்ச் காவல்துறை அதிகாரியாக, சுந்தர் சி, இயக்குனராக இருக்கும் பொழுது ஒரு முகம் நாயகனாக நடிக்கும் பொழுது இன்னொரு முகம் என்று ரசிக்க வைக்கிறார். அவரது கூடவே வரும் காவல்துறை அதிகாரியாக டி எஸ் கேவும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

ஆங்காங்கே விறுவிறுப்பான சண்டை காட்சிகளை அமைத்து சுந்தர் சி – க்கு தீனி போட்டு இருக்கிறார் சண்டே பயிற்சியாளர் விக்கி.

ஈகோக்களில் பாதிக்கப்பட்டு நேர்மையான அதிகாரிகளை சரியாக கடமை செய்ய விடாமல் கட்டிப்போடும் காவல்துறை உயர் அதிகாரிகளை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்கள்.

ஒரு குற்றப் பின்னணியில் தொடங்கி புலனாய்வு பயணமாக தொடர்வதை சுவராஸ்சியப்படுத்தசுந்தர் சி , தான்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் உதவி இருக்கிறது என்றால்,  எழுப்புகை கூட்டங்கள் நடத்தும் பெரும் பணக்கார பாதிரியார் வீட்டில் திக்குவாய் பணி பெண்ணாக வந்து தனது மகளைப் பறிகொடுக்கும் சாந்தினி இன்னொரு பக்கம் அனைவரையும் கண்கலங்க வைத்து விடுகிறார்.

இன்னும் கொஞ்சம் நல்லாவே எடுத்திருந்தால் வல்லானும், வணிக ரீதியாக பெரிய வெற்றிகளை குவித்திருப்பான்.