குழந்தைகள் முன்னேற்ற கழகம்

Rating 3/5

92

a K Vijay Anandh review

கட்சியின் நிரந்தர பொதுச் செயலாளர் பக்கிரிசாமி, லால் சலாம் படத்திற்கு பிறகு நடிகர் செந்தில் ஏற்றிருக்கும் அற்புதமான கதாபாத்திரம். கவுண்டமணியுடன் சேர்ந்து இவர்கள் செய்யும் அரசியல் நையாண்டிகள் கிளாசிக் வகை . அதற்கு சற்றும் குறைவில்லாதவை,  யோகி பாபு மற்றும் சுப்பு பஞ்சு ஆகியோருடன் சேர்ந்து இந்த படத்தில் இவர் அடித்திருக்கும் அரசியல் நையாண்டிகள். சமகால யதார்த்த அரசியல் தலைவரை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்.

போகும் இடமெல்லாம் மல்லிகைகளை பூக்க வைக்கும், அரசியல்வாதியாக யோகி பாபு வும் ,  அவரது மனைவிக்கு பிறந்த இமய வர்மனும்,  துணைவிக்கு பிறந்த மஸ்தானும்,  முன்னாள் காதலியும் இந்நாள் பஞ்சு சுப்புவின் மனைவியின் மகளான நீலாம்பரியும், அவர்கள் பள்ளிக்கூடத்தில்  அடிக்கும் அரசியல் லூட்டிகளே முழு படமும்.

பள்ளி தலைமை ஆசிரியர் சித்ரா லட்சுமணனின் முக்கியமான ஒரு வீடியோவை வைத்து மிரட்டும் இடங்களில் இமயவர்மனும், யோகி பாபுவிற்கு எதிரான அரசியல் நடத்தும் பஞ்ச சுப்புவின் வீடியோக்களின் உண்மை தன்மையை நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தோல் உரிக்கும் மஸ்தானும், ஜெ.ஜெயலலிதா முகச்சாயலில் இருக்கும் ரங்கநாயகியை அரசியலில் பலிகடவாக ஆக்க  துடிக்கும் நெருங்கிய தோழியான நீலாம்பரியும் படம் முழுவதும் பதைபதைக்க வைக்கின்றார்கள்.

இது அரசியல் படமா ? குழந்தைகள் படமா? என்றால் குழந்தைகளுக்கான ஒரு அரசியல் படம் என்று சொல்லத் தோன்றும் வகையில் இந்த படத்தை மிகவும் விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் இயக்கி இருக்கிறார் சங்கர் தயாள் .

யார் யாரையோ முன்னேற்ற கழகங்கள் இருக்கும்பொழுது நமது குழந்தைகளை முன்னேற்ற ஒரு கழகம் இருந்தால் நல்லது தானே என்று என்ன தோன்றும் படமாக இந்த படம் வெளியாகி இருக்கிறது.