a K Vijay Anandh review
அடர்ந்த காட்டிற்குள் அமானுஷ்ய சக்தியை தேடி போகும் இளைஞர்கள், காணாமல் போகிறார்கள் அவர்களைப் பற்றிய தகவல்கள் அவர்கள் எடுத்துச் சென்ற கேமராக்களில் பதிவான அதன் அடிப்படையில் வெளியாகிறது என்பதாக ஒரு தொலைக்காட்சி செய்தியின் முன்னுரையுடன் இந்த கதை ஆரம்பித்திருக்கும் விதம் அருமை. நேயர்கள் விரும்பி கேட்கும் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித்தின் குரலின் மூலம் படம் பார்க்கும் ரசிகர்களும் இது உண்மை சம்பவம் தான் என்று நம்பிவிடும் அளவிற்கு சிறப்பான யுக்தியை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் ஹேம்நாத் நாராயணன்.
இப்படிப்பட்ட திகில் படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு, படத்தின் இறுதி காட்சியில் மங்கையுடன் சேர்த்து ஏழு கண்ணீரையும் காட்டியிருக்கும் விதம் மிகவும் அருமையாக இருக்கிறது. இதனை பார்ப்பவர்கள் பயப்படுவார்கள் என்றால் மிகை ஆகாது.
ரிச்சிகபூர், தேவராஜ் ஆறுமுகம், சுகன்யா சண்முகம், அரிய செல்வராஜ் மற்றும் கிராமத்து பெண்ணாக வரும் யுவிகா ராஜேந்திரன் ஆகியோரது காட்டுப் பயணம் லைவாக நேரலையாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பது தமிழ் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும்.
மர்மர், தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான முயற்சி!