a K Vijay Anandh review
ஒரு பெண் இறந்து போகிறாள், அவளின் பிணம் வீட்டை விட்டு வெளியேற மறுக்கிறது, அவள் சாவிற்கு இவர்கள் எல்லாம் காரணமாக இருப்பார்களோ என்கிற அளவிற்கு ஒவ்வொருவராக வந்து அவர்களுக்கும் இறந்த பெண்ணிற்கும் இடையில் ஏற்பட்ட சம்பவங்களை வாக்குமூலங்களாக கொடுத்து செல்கிறார்கள், இறுதியில் உண்மையான காரணம் ஊருக்கு தெரிய வரும் பொழுது, பிணம், சுடுகாட்டிற்கு கிளம்புகிறது.
இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலனுக்கு ஒரு ராயல் சல்யூட். ரூபா கொடுவாயூர், செல்ல மகளாகவும், ஊருக்கு நல்ல பெண்ணாகவும், தூக்க முடியாமல் கனக்கும் பிணமாகவுமாக படம் முழுவதும் ரசிக்க வைத்திருக்கிறார்.
அவரது பெற்றோர்களாக வரும் ராஜா ராஜப்பன் மற்றும் கீதா கைலாசம் ஆகியோர் வழக்கமாக மிகவும் சிறப்புகள் அளித்து இருக்கிறார்கள்.செல்ல மதுரை இழந்து துடிக்கும் தந்தையாக ராஜா ராஜப்பனும், மகளை இழந்து பிரமை பிடித்தது போல படம் முழுவதும் வரும் கீதா கைலாசமும் குணச்சித்திர நடிகர்களாக உயர்ந்து நிற்கின்றார்கள்.
வீட்டில் அண்ணனாகவும் ஊருக்கு வில்லனாகவும் மிரட்டி இருக்கிறார் சுபாஷ் ராமசாமி. இவரது மனைவியாக படம் முழுவதும் நிறை மாத கர்ப்பிணியாக, அந்த சூழ்நிலையிலும் வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டு செய்யும் எதார்த்த பெண்மணியாக, இறந்தபெண்ணின் அண்ணியாக சிறப்பாக நடித்திருக்கிறார் ஹரிதா . சிறந்த துணை கதாபாத்திர நடிகர்களுள் இவரும் ஒருவர் என்றால் மிகையாகாது.
கோயில் நகை திருட்டு, பிணம் நகராமல் இருப்பது என்கிற களத்தில் பயணித்தாலும் சமூக ஒற்றுமை என்கிற விஷயத்தை கதை முழுவதும் ஆங்காங்கே தூவி இறுதியில் அதையே பிரதானமாக முடித்திருக்கும் இந்த அழகான திரை கதையை தவற விடாதீர்கள்.
ஸ்ரீனிவாசராவ் ஜலகம் , என்று தந்தையின் பெயரை தயாரிப்பாளராக அழகு பார்த்து இந்த படத்தை, சிறப்பான ஒரு படமாகவே கொடுத்திருக்கும் வெங்கட் ராகுலுக்கு வாழ்த்துக்கள்.
எமகாதகி , அனைவருக்கும் பிடித்தவள்!