SUMO

mysixer rating 3/5

243

a K Vijay Anandh review

ஆந்திராவை கலக்கிய புஷ்பராஜ் தனது கண்டெய்னரில் ஒளிந்து கொண்டு 40 நாட்கள் பயணித்து ஜப்பான் துறைமுகத்தை சென்றடைந்த அதே நேரம் ஜப்பானிலிருந்து ஒரு சுமோ வீரன் சென்னை கடற்கரையில் கரை ஓதுங்குகின்றான்.

அவனைக் காப்பாற்றி அவன் யார் என்ன என்பதை அறிந்து திரும்பவும் ஜப்பானில் கொண்டு போய் விடுகிறார் ஷிவா.

ஒரு கதைக்களமாக கொஞ்சம் வித்தியாசமாகவே யோசித்து இருக்கிறார் இயக்குனர் ஹோசிமின் .

ஷிவாவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கான ஒரு அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் மேன் வேடம். ஒரே ஒரு தடவை சர்ஃபிங் செய்கிறார் அதன் பிறகு அவரது சுண்டு விரலை சுமோ வீரன் இடைவிடாது பற்றிக் கொண்டிருப்பதால் சர்ஃபிங் செய்ய முடியவில்லை.

இவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் வழக்கம்போல கேர்ள்  நெக்ஸ்ட் டோர் கதாபாத்திரம், ஆனா ஊனா ஐயாயிரம் பத்தாயிரம் என்று தாராளமாக எடுத்து உதவி செய்யும் கதாபாத்திரம்.

VTV கணேஷ் மற்றும் யோகி பாபுவும் அவ்வப்பொழுது நகைச்சுவை மூட்டுகிறார்கள்.

ஜப்பானுக்கு ஆள் அனுப்புவதாக இருந்தால் அந்த மொழி பேசலாம் ஆனால் ஜப்பானிய உடைகளையே உடுத்திக் கொண்டிருக்க வேண்டுமா என்ன.? ஸ்ரீகாந்த் தன் பங்கிற்கு பட்டையை கிளப்பி இருக்கிறார். அதிலும் அந்த புருவ கெட்ட அப்!!!

ஒரு வழியாக சுமோ வீரன் கணேஷை ஜப்பான் இருக்கு அழைத்துச் சென்று சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்து மீண்டும் சாம்பியன் ஆக்குகிறார்கள். யோஷிநோரி டஷினோ, தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதிய விருந்து.

கதையை ஒரு ஃப்ளாஷ்பேக்கில் செல்வதாக அமைத்து அதனை சதீஷ் மற்றும் சுரேஸ் சக்கரவர்த்தி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கேட்பதாக அமைக்கப்பட்டிருக்கும் விதம் சுவராஸ்யம்.

ஜப்பான் சுமோ வீரரை விட இரண்டு மடங்கு பெரியதாக இருக்கும் ஷிவாவின் உதவியாளர் மணி மற்றும் தயாரிப்பாளர் ஐசரி K கணேசனின் உதவியாளர் விக்கி இருவரையும் நடிகர்களாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். தொடர்ந்து நடிக்கலாம் என்கிற அளவிற்கு நடித்திருக்கிறார்கள்.

ஷங்கர் படங்கள் என்றாலே பொதுமக்களுடைய இன்டராக்சன் இருக்கும்.    ஹோசி மின் , அவருடைய சீடர் ஆயிற்றே, பொதுமக்களாக நன்கொடை அளித்து அவர்களை ஜப்பானுக்கு அனுப்புவது சாம்பியன்ஸ் போட்டியை லைவாக பார்த்து மகிழ்ந்து கொண்டாடுவது என்று ஷங்கர் டச் தெரிகிறது.