GANGERS

mysixer rating 4/5

384

a K Vijay Anandh review

வந்துட்டான்யா வந்துட்டான்யா                திரும்பி வந்துட்டான்யா, இந்த காமெடி புயல் என்று ரசிகர்கள் ஒவ்வொருவரும் கொண்டாடும் அளவிற்கு வைகைப்புயல் வடிவேலு தனது அட்டகாசமான காமெடியுடன் திரும்பி வந்துவிட்டார்.

அம்மாவின் “கையில் அடித்து ” கொடுத்த சத்தியத்திற்காக, ” இதுவரைக்கும் கொட்டு அடிச்சதில்ல…  கோழி அடிச்சதில்ல…. ” என்று நூறு விஷயங்களை அடிச்சதில்லை அடிச்சதில்லை… என்று சொல்லிவிட்டு நூற்றி ஒன்றாவதாக, “இவ்வளவு ஏன்…” என்று அருள்தாஸ் காதில் ஒன்றை சொல்கிறார், திரையரங்கமே அதிர்கிறது. அப்படி என்னத்தையா அடிச்சதில்லை…? வடிவேலுவின் ட்ரேட் மார்க்  காமெடியான மண்ட பத்திரம் என்கிற வசனம் நினைவுக்கு வருகிறது ஆம், கட்டி முடித்து 30 40 ஆண்டுகள் ஆன திரையரங்குகள் பத்திரம். எதற்கும் படத்தின் தயாரிப்பாளர் ACS தயாராக இருக்கவும், அரங்கம் அதிர்ந்து விரிசல் விழுந்து விட்டது என்று திரையரங்கு உரிமையாளர்கள் வரக்கூடும்.

வடிவேலுவுக்கு என்று அமையும் கேங்குகள் படத்திற்கு படம் நிச்சயம் பட்டையை கிளப்பும். இந்த படத்திலும் சந்தான பாரதி, பகவதி,  முனிஷ் காந்த்  ஆகியோருடன் சேர்ந்து வடிவேலு அடிக்கும் காமெடி அதகளம்.

மாறுவேடம் என்கிற கான்செப்ட் வடிவேலுவுக்கு சூப்பராக கை கொடுக்கிறது. போக்கிரி படத்திற்கு பிறகு இந்த படத்தில் அவர் போடும் மாறு வேடங்களும் மிகவும் அற்புதமாகவே காமெடிக்கு கை கொடுத்திருக்கிறது. அதிலும் முத்தாய்ப்பாக அவர் போட்டிருக்கும் முதியவர் அதாவது கிழவி வேடம் கிளைமாக்ஸ் விருந்து.  ரைட்டர் வெங்கட் சொல்வது முற்றிலும் சரிதான், “அந்த நாத்தனாரை விட கிழவி செமை …” .

அதிலும் சுந்தர் சி வடிவேலு காம்பினேஷன் என்றாரே உத்திரவாத நகைச்சுவைதான் என்று இந்த படம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது.

வழக்கமான வணிக மசாலா கதை தான் கேங்கர்ஸ். ஆனாலும் அதற்குள்ளும் சமூக பிரச்சினைகளையும் எதிர்பார திருப்பங்களையும் வைத்து இந்த படத்தை விறுவிறுப்பு ஆக்கியிருக்கிறார்கள் எழுத்தாளர் வெங்கட்டும் இயக்குனர் சுந்தர் சி யும்.

வில்லன்களை நையப்புடைக்கிறார்,  வடிவேலுவுடன் காமெடி கலாட்டா செய்கிறார்,  வாணி போஜன் உடனும் கேத்தரின் தெரசாவடனும் டூயட் பாடுகிறார் சுந்தர் சி, தவிர்க்க முடியாத தமிழ் சினிமாக்காரர்.

அரசன் சகோதரர்களாக வரும் ஹரிஷ் பேரடி, மைம் கோபி மற்றும் அருள் தாஸ் மிரட்டி இருக்கிறார்கள்.நம்மைப் போலவே கிளைமாக்ஸ் வரை காத்திருந்து அவரது பணத்தை ஆட்டையை போட்டவர்களை கண்டு கொள்கிறார் மதுசூதன் ராவ்.

சிறுவன் சூரி யாக நடித்திருக்கும் பிரபாகரனின் மீது கதை ஆரம்பித்து வில்லனுடன் முடிவதாக அமைக்கப்பட்ட இடைவேளை அற்புதம், யாரும் யூகிக்க முடியாத திருப்பம். சுந்தர் சி யின் ஸ்டோரி டிஸ்கஷன் ஆட்களை அப்படியே கடத்திச் சென்று விட்டால் பல கதைகள் கிடைக்கக்கூடும்.

இவரது படங்கள் விக்கு இல்லாமல் இருக்கலாம் ஆனால் இந்த விச்சு இல்லாமல் இருக்காது, அந்த அளவிற்கு சுந்தர் சி வடிவமைக்கும் ஏதேனும் ஒரு கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி போய் விடுகிறார் விச்சு விஸ்வநாத்.

விஷாலையும் விமலையும் பயன்படுத்திக் கொண்ட விதம் அருமை.

GANGERS, சிரிப்புக்கு உத்தரவாதம்!