ஆகக்கடவன

mysixer rating 4/5

438

a K Vijay Anandh review

என்ன ஒரு எளிமையான, அதே நேரம், அதிக வலிமையான,  அதைவிட அதிக நேர்மையான, எல்லாவற்றையும் விட அதிக நேர்மறையான திரைக்கதை, ஆதித்யா தர்மா. பேசும் எல்லா வார்த்தைகளும் சரியாக இருந்துவிட்டால் எல்லாமே சரியாக அமைந்துவிடும் என்கிற மாயஜாலம் இல்லாத யதார்த்தமான கருத்தை அழுத்தமாகவே விதைத்திருக்கிறார்.

பிரபஞ்ச சக்தியை நம்பும் அப்படி ஒரு நேர்மறையான கதாபாத்திரமான ஆதிரன் சுரேஷுக்கு எல்லாமே அவர் நம்பியபடி நடந்ததா என்பதே ஆகக்கடவனின் அற்புதமான திரைக்கதை.

ராகுல் மற்றும் ராஜ சிவனுடன் வில்லன்கள் கூட்டத்தில் சிக்கிக்கொள்ளும் ஆதிரன் சுரேஷை அவர் ஆழ்மனதில் நம்பியபடியே அனைத்தும் வந்து காப்பாற்றுவது கைதட்டல் ரகம். வின்செண்ட், மைக்கேல் மற்றும் சதிஷ் ராமதாஸ் ஆகியோர் வில்லனத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.

உண்மைதானே, எதை விதைக்கின்றோமோ அது தானே விளையும்.

இந்தக்கதையை ஆதித்யா தர்மா எப்படி யோசித்தார், அதை விட இதை எப்படி தயாரிப்பாளர்களிடம் கூறி ஏற்றுக்கொள்ள வைத்தார் எல்லாமே வியப்பான விஷயம் தான். இப்படி ஒரு நேர்மறையான கதையை திரையில் கொண்டுவர மெனக்கெட்ட தயாரிப்பாளர் அனிதா லியோவை பாராட்டியே ஆகவேண்டும்.

சுமித் பாண்டியன் மற்றும் பூமேஷ் தாஸ் ஆகியோரின் எடிட்டிங் அபாரம். லியோ வி ராஜாவின் ஒளிப்பதிவிலும் சாந்தன் அஜேபஜகனேவின் இசையிலும் ஆகக்கடவன விறுவிறுப்பாக நகர்கிறது.

நல்லதே பேசு, நல்லதே நினை பிரபஞ்சம் நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது, நமக்கான எல்லாவற்றையும் தர  காத்துக்கொண்டுள்ளது அதுவே ஆகக்கடவன சொல்லியிருக்கும் ஆகச்சிறந்த செய்தி !