பரமசிவன் ஃபாத்திமா

mysixeer rating 4/5

183

a K. Vijay Anandh review

K.பாலசந்தருக்குப் பிறகு, பல வருடங்கள் கழித்து  இந்துவாக இருந்து கிருஸ்துவ மதத்திற்கு மாறுவதால் ஏற்படும் அவலங்களைச் சொல்லும் படமாக – தமிழில் – இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் பரமசிவன் ஃபாத்திமா வெளிவந்திருக்கிறது.

சுப்ரமணியபுரத்தில் இருந்து பிரிந்து சென்ற யாக்கோபுரம் மற்றும் சுல்தான்பேட் எப்படி சுப்ரமணியபுரம் என்கிற தாய்  நாட்டிற்கு பிரச்சினையாக மாறுகிறது என்பதை சொல்ல வந்து இதில் யாக்கோபுரத்தை மட்டும் சாடியிருக்கிறார்,  சுல்தான்பேட்டால் வரப்போகும் பிரச்சினைகளை அடுத்த பார்ட்டில் காட்டலாம் என்று வைத்திருக்கிறாரோ என்னவோ !

கிருஸ்துவ மதமாற்றம் பற்றி பொதுவெளியிலோ படத்திலோ பேசப்பயப்படும் நடிகர்களுக்கு மத்தியில், இரண்டு மூன்று வசனங்கள் தான் என்றாலும் மிகவும் தைரியமாக இயல்பாக பேசி நடித்திருக்கும் விதத்தில் விமலை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நாயகி சாயாதேவி மட்டும் என்ன கொக்கா..? சாமின்னா பேசத்தான் செய்யும் … செத்த பிணம் தான் பேசாது… என்று கிறுஸ்துவ வெறிகொண்ட தன் தாயிடம் கூறும் இடம் அட்டகாசம். என்னமா நடிக்கிறார்..? விமலோடு செய்யும் காதல் முதல், வில்லன்களை பழிவாங்குவது குறிப்பாக தனது அண்ணன் எம் சுகுமாருடன் மோதும் காட்சிகள் என்று அமர்க்களப்படுத்திவிடுகிறார்.

விமல் மற்றும் சாயாதேவியின் மீடியம்களாக வரும், சுல்தான் பேட் சலீம் – யாக்கோபுரம் ஜெனிபர் கதாபாத்திரங்கள் அருமை. அதில் ஜெனிபராக வரும்  சேஷ்விதா கவனிக்க வைக்கிறார். குறிப்பாக, ஒரு திருமண  வரவேற்பில் அவர் பாடி ஆடும் முதல் பாடல்காட்சி நிச்சயம் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்றால் மிகையல்ல,

மகேந்திரன் தன் கண்முன்னே தன் மாமன் மகள் விமலை காதலிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர் செய்யும் காரியங்கள் பயங்கரமானது.

மூத்த நடிகர் மனோஜ்குமார், ஆதாயத்திற்காக மதம் மாறும் அவல நிலையை கண்முன் கொண்டுவந்திருக்கிறார். மனைவி ஆதிரா குழந்தைகளுடன் ஞானஸ்நானம் செய்து கிறுஸ்டுவர்களாக மாறும் காட்சிகள் யதார்த்தம்.

எம் எஸ் பாஸ்கர், கிருஸ்துவ பாதிரி என்றாலே அதற்கு கன்னியாகுமரி நெல்ல மாவட்டங்கள் தான் மாதிரி எனும் அளவிற்கு – கச்சிதமாக அவரை நெல்லையைச் சேர்ந்த பாதிரியாக காட்டி அட்டகாசப்படுத்தியிருக்கிறார். இவர்கள் செய்யும் மதவியாபார காரியங்கள் வடகிழக்கு மாநிலங்கள் வரை நீண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல! சாத்தான்கள் உள் நுழைய தடை என்று போர்டு வைப்பது – திரு நீறு பட்டுவிடக்கூடாது என்று தெறித்து ஓடுவது என்று  தீவிர அந்நிய மத அடிமைத்தனங்களைச் சுமந்து கொண்டு நடைப்பிணமாக வாழ்பவர்களை கண்முன் கொண்டு வந்திருக்கிறார்.

எம் சுகுமாரா..?இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியபோது சந்தித்த சில கசப்பான சம்பவங்கள் காமெடியான அனுபவங்கள் இவரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்து பழிவாங்க தூண்டியிருக்கும் என்றால் மிகையல்ல. வெளி நாட்டு பணத்திற்காக சொந்த அப்பாவையும் தங்கையும் பலிகொடுக்கும் அளவிற்கான கிருஸ்துவ மதவெறியை கண்களில் ஏற்றி ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார்.

வீரசமர், திருமண நிகழ்வில் பாட்டிலுடன் அறிமுகமாகும் காட்சியிருந்து, கிளைமாக்ஸ் வரை குவார்டருடனே நடித்திருக்கிறார். கவுண்டமணி – செந்தில் போல  வீரசமர் – பாட்டில் பிரிக்கமுடியாத இணையாக வரும் காட்சிகள் எல்லாம் வஞ்சனை இல்லாமல் சிரிக்க வைத்திருக்கிறார்.

உடல்முழுவதும் திருநீறுபூசிக்கொண்டு சாமியாராக வரும் அருள்தாஸ் ஆச்சிரியப்படும் அளவிற்கு சிறப்பாக நடித்திருக்கிறார்.

காதல் சுகுமார்  – ஆறு பாலா காமெடி கான்ஸ்டபிள்களாக பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.

இவ்வளவு பெரிய நடிகர் பட்டாளத்தை கேமராவிற்கு பின் நின்று மட்டுமல்லாமல், அந்த கிராமங்களில் நடைபெறும் தொடர் துர்மரணங்களை விசாரிக்க வரும் காவல்துறை உயரதிகாரியாக கேமராவிற்கு முன் நின்றும் அற்புதமாக ஆட்டுவிக்கிறார் இயக்கு நர் இசக்கி கார்வண்ணன்.

கிருஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதங்களுக்கு மாறிப்போன சொந்தபந்தங்களை நினைத்து நொந்து வாழ்வது சுப்ரமணியபுரம் கிராம மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாக இந்தியாவில் வாழும் அத்தனை பேரும் தான் என்பதை சொல்லாமல் சொல்லி விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.

தீபன் சக்ரவர்த்தியின் இசை அற்புதம், இளையராஜாவின் இனிமையை அவரது பாடல்களை கொண்டுவந்து காட்டாமல் – அவர் பாடலைப்போன்றே இவர் இசையமைத்திருக்கும் பாடல்கள் அருமை ! குறிப்பாக ஒரு தாலாட்டு இசைத்திட வந்தாய்….

மலையும் மலைசார்ந்த இடங்களுமென்றாலா கேமராவை தூக்கி தோள்ல வைய்யா என்று கிளம்பிவிடுபவர் எம் சுகுமார்., இதிலும் நேர்த்தியான ஒளிப்பதிவு.

பரமசிவன் ஃபாத்திமா –  இந்துவாக இருந்து பிறமதம் மாறுவதால் ஏற்படும் இன்னல்களைச் சொல்லும் படம் !