a K Vijay Anandh review
நல்ல ஒரு நேர்மறையான படத்தலைப்பு, ஆனால் அந்த நல்ல நாள் விடிவதற்குள் மிக மிக மோசமான ஒரு நாளை நாயகன் கடக்கவேண்டியிருக்கிறது.
போன மாச சம்பளம் போடல, சூப்ரவைசர் தப்ப தட்டிக்கேட்டா முதலாளி க்கு பிடிக்கல , ஒரு வழியா சாயங்காலம் சம்பளம் போட்டு , பொண்டாட்டிக்கும் அம்மாவுக்கும் அனுப்பி வைச்சா , ஆத்தாளுக்கு எவ்வளவு அனுப்பின என்று பொண்டாட்டிகிடட இருந்து போன் .
தக்காளி சிம் கார்டை கழட்டி எறிஞ்ச்சுட்டு சரக்கடிக்க உட்கார்ந்தால் , காலேஜு டாவு நினைவுக்கு வர, அவ புருஷன் போலீசுக்கு போக , அங்கிருந்து டேக் ஆஃப் ஆகுது கதை. நடுவுல ஹவுஸ் ஓனர் ரவுசு வேற.
அப்புறம் ஒரு குழந்தை கடத்தல், நாயகன் உதவியுடன் மீட்பு என்று எப்படிர்றா இப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கன்னு சத்தியமா டவுட்டு வருது .
அதனால இயக்குநர் என் அரவிந்தனை பாராட்டும் முன் திரைக்கதை வசனம் எழுதிய பூர்ணா ஜெஸ் மைக்கேல் ஐ பாராட்டியே ஆக வேண்டும். அவரே மிகவும் அளவாக தான் வசனம் எழுதியிருக்கிறார் என்றால் நம்ம கார்த்திக் நேத்தா கூடுதலாக கொஞ்சம் எழுதியிருக்கிறார், அது மட்டுமல்ல ஒரு சீன்ல, சித்தர் மாதிரி சீனும் போட்டிருக்கார்.
பிரித்திவிராஜ் ராமலிங்கம், காளி வெங்கட், மைனா நந்தினி, ஆடுகளம் முருகதாஸ், பகவதி பெருமாள் (பக்ஸ்), வேல ராமமூர்த்தி, போஸ் வெங்கட், விஜய் முருகன் (கலை இயக்குனர்) மற்றும் ஜீவா சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
பிரித்திவிராஜ் ராமலிங்கம், தான் நாயகன் , சவாலான கதாபாத்திரம் , சிறப்பாக நடித்திருக்கிறார். அட இவருதான் இந்த கதையின் கருவையும் உருவாக்கியிருக்கிறார், சபாஷ். விஜய் முருகன், இவரை வில்லன்னு யோசிக்கும் போதே , நல்லவராக முடித்து வைக்கிறார்கள்.
கோவிந்தாவின் இசை அருமை.
மோசமான நாட்கள் நிரந்தரமல்ல , நல்ல நாள் நமது கையில் தான் இருக்கிறது. சனியன் மதுவை விட்டொழிப்போம் ! எல்லா நாளும் நல்ல நாளே !