a K Vijay Anandh review
நல்ல படம் என்று தலைப்பு வைத்ததற்கு பதிலாக நல்ல பாடம் என்று தலைப்பு வைத்திருக்கலாம். அட கொரனா ஊரடங்கு காலத்தில் நாம குடிக்காமத்தானய்யா இருந்தோம்!
மது இல்லா தமிழகம், மதுவை வேண்டாம் என்றும் மதுவிலக்கு வேண்டும் என்று போராடும் தமிழர்கள். சி பிரபுராம் முதலமைச்சர் ஆகி முதல் கையெழுத்து மது விலக்கு சட்டதிற்கு போடப்போகிறாரா ? அல்லது இந்தப்படத்தில் நடித்த நாயகன் ஹரிஷ் முதலமைச்சர் ஆகி கையெழுத்து போடப்போகிறாரா ? அல்லது ஹீரோயின் தனலட்சுமி ?
அட எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எவனுக்கு தெரியும் !
ஆனால், சி பிரபுராம், இந்தப்படத்திற்கான கதை எழுதும் போது தனது கையெழுத்தில் மது விலக்கை கொண்டு வந்தார் பார்த்தீர்களா ? அதுவே நல்ல சிந்தனை., அவரது கனவு மெய்ப்பட வாழ்த்துகள்.
மதுக்குடிப்போர் சங்கம் வைத்து, நண்பர்கள் மற்றும் சங்க ஆட்களுடன் எந்த நேரமும் மதுவைச் சுற்றியே வாழ்ந்து வரும் நாயகன் ஹரிஷ் , மதுவால் நண்பர்களின் குடும்பம் சிதைவதை கண்டு மனுமுடைய, தோதாக மதுவிலக்கும் அமல்படுத்தப்பட அதே சங்க ஆட்கள் நண்பர்களுடன் சேர்ந்து நர்சரி பண்ணை ஆரம்பித்து புது வாழ்க்கை வாழ்கிறான். மீண்டும் மது கொண்டு வர ஆலோசனைகள் நடக்கும் போது அவன் என்ன செய்கிறான் என்பது வித்தியாசமான கிளைமாக்ஸ்.
ஆறடியில், ரகுவரனே மறு அவதாரம் எடுத்தது போல ஸ்கிரீனை ஆக்ரமிக்கிறார் நாயகன் ஹரிஷ், பல இடங்களில் அவரது குரலும் ரகுவரனைப் போலவே இருக்கிறது. நல்ல கதைகள் அமைந்தால், இவரும் ஒரு ரவுண்டு வருவார் என்று நம்பலாம் !
முதலிலேயே குறிப்பிட்டது போல நல்ல படம், நல்ல பாடம் மதுப்பிரியர்களுக்கு மட்டுமல்ல, அரசுக்கும் தான் !