திருக்குறள்

mysixer rating 5'5

179

a K. Vijay Anandh review

திருமண நிகழசசிக்கு சென்று மணமக்களை வாழ்த்தும் போது ,

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

என்கிற திருக்குறளை சொல்லிவிட்டு , வள்ளுவன் வாசுகி போல வாழ்க என்று வாழ்த்துவதை பார்த்திருப்போம் .

ஆனால் , ஒரு திருமண நிகழ்வில் வள்ளுவனும் வாசுகியும் தம்பதி சமேதராய் வந்து மணமக்களை வாழ்த்துவதை , பார்க்க நேர்ந்தால் ? இந்தப்படத்தில் அதை  பார்க்கும் போது மிகவும் சிலிர்ப்பான அனுபவமாக இருந்தது. அந்த அனுபவத்தை நீங்களும் பெற A.J.பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியாகியுள்ள திருக்குறள் திரைப்படத்தை தவறாமல் அதுவும் குடும்பத்தோடு பார்த்து மகிழுங்கள்.

இன்னும் கூடுதல்ச்சரியம் , திருவள்ளுவரே திருவள்ளுவராக நடித்துக்கொண்டிருக்கிறாரோ என்றுண்ணத்தோன்றும் அளவிற்கு கலைச்சோழன், நீண்ட தாடியும் , தலைமுடியுமாக தோற்றத்தில் மட்டுமல்ல , தமிழ் ஆளுமையில் , தீர்க்கமான பார்வையில் அப்படியே நம்மை முதல் நூற்றாண்டிற்கு அழைத்துச்சென்றிருக்கிறார்.

அய்யனின் மனைவி வாசுகியாக வரும் தனலட்சுமி யும் , ஆயியாகவே வாழ்ந்திருக்கிறார். வள்ளுவர் எழுத வாசுகி பிரதியெடுக்க , மலர்ந்த காதலுடன் உடன்போக்காக சென்று கரம்பிடிக்கிறார்கள். அய்யன் வள்ளுவன் அன்றே பெண்மைக்கு சம உரிமை அளித்துவிடடான்.

வள்ளுவனின் பயணம் ஊடாக , குமணன் , இளங்குமணன் மற்றும் நன்னன் ஆளும் நாடு நாடடைச் சுழும் ஆபத்து இறுதியாக பாண்டிய மன்னன் தலைமையில் மீனாட்சி அம்மன் ஆலயத்தில் திருக்குறள் அரங்கேற்றம் என்று விறுவிறுப்பாக பயணிக்கிறது இந்தப்படம் .

நடுவே குமணனின்மெய்க்காப்பாளன் பரிதி மற்றும் பவளக்கொடி சுகன்யா மாட்டத்தியாக வரும் பாடினி குமார் ஆகியோரது காதல், போர்க்களம் என்றுட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள்.

மனிதர்களை ஐவகை நிலப்பரப்பில் மற்றும் நான்கு வர்ணங்களில் அடையாளப்படுத்துவது போன்ற காட்சிகள் அழகு.

கே சுந்தர் , பாண்டிய மன்னனாகவே கம்பீரமாக நடித்திருக்கிறார். வந்திருப்பது இறைவன் என்று தெரிந்தும் நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என்று வாதிட்ட நக்கீரர் புலவர்களுக்கோ அவர்கள் கொண்டு வரும் படைப்புகளுக்கோ எதிரானவர் அல்ல, தமிழ்ச்சங்கத்தில் அரங்கேயேற்றப்படும் படைப்புகளில் தவறுகள் இருந்து விடக்கூடாது என்று தான் நினைக்கக்கூடியவர்.

திரு நிறு அணிந்த நக்கீரர் அத்திரு நீறு இல்லா நெற்றியுடன்சமீபத்தில் திராவிட மாடல்மிழக அரசு வரைந்தது போலஇருக்கும் திருவள்ளுவரை பார்த்து கோப்படுவதாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகள்என்ன சொல்ல வருகின்றன என்பது இயக்குநருக்கே வெளிச்சம். நக்கீராராக சுப்ரமணிய சிவா சிறப்பாக நடித்திருக்கிறார்.

கிடைத்த இடங்களை கச்சிதமாக படம் பிடித்து நம்மை திருவள்ளுவர் வாழ்ந்த காலகட்டத்திற்கே அழைத்து சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் எட்வின் சகாய்.

இளையராஜாவின் இசை , சுரேஷ் கலேரியுமின்லை இயக்கம் ஆகியவை படத்திற்கு பெரிய பலம்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் செம்பூர்.கே.ஜெயராஜ் எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிகவும் தெளிவான, அதே நேரம் வலிமையான, அதைவிட அதிகமாக அனைவராலும் புரிந்து கொள்ளத்தக்க அழகான தமிழில் அற்புதமான வசனங்களை கொடுத்ததற்கு அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வள்ளுவனை கொண்டாடுங்கள் , குடும்பத்துடன் திருக்குறளை பாருங்கள் , படம் பார்த்துவிட்டு குடும்பத்துடன் திருக்குறளை படியுங்கள் !