Dark Heaven

Rating 4.5/5

6

a K Vijay Anandh review

வருடந்தோறும் வரும் பருவ காலங்கள் போல, அது ஒரு கொலைகள் நடக்கும் ஜூன் மாதம்.  7 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும், அந்த திகிலான மாதத்திற்கு பயந்து  வெளியில் இருந்து யாருமே அங்கு வருவதற்கு பயப்படுவார்கள். குறிப்பாக காவல்துறை பதவிக்கு வருபவர்கள். காரணமாக சொல்லப்படும் பிளாஷ்பேக் காட்சிகளில் பயமுறுத்தியிருக்கிறார்கள்.

அப்படி ஒரு பயங்கரமான ஜூன் மாதத்தில், துணிச்சலான  காவல்துறை அதிகாரியாக வருகிறார் சித்து சித், அவருடன் அவருடைய மனைவியாக தர்ஷிகா நவரத்னராஜா மற்றும் குழந்தையுடன். எதிர்பார்த்தது போலவே கொலைகள் நடக்கின்றன.

அந்த கொலைகள் அமானுஷ்ய சக்தியால் நிகழ்த்தப்படுகின்றனவா அல்லது வேறு யார் மூலமாகவா ? என்பதை தனது சாதுர்யமான துப்புதுலக்கு மூலம் கண்டு பிடிக்கிறார், சித்து சித்,  விலையாக தனது மனைவியை பறிகொடுக்கிறார்.

சித்து சித், அந்த கதாபாத்திரக்கேற்ற கம்பீரம், அட்டகாசமாக நடித்திருக்கிறார்.  சக  காவல்துறை அதிகாரியால் வஞ்சிக்கப்பட்டு சஸ்பெண்ட் ஆன நிலையிலும், மனைவியை இழந்து தவிக்கும் இடத்திலும், கைக்குழந்தையை வைத்துக்கொண்டும் சவாலான கேஸில் குற்றவாளியை நெருங்கும்  இடத்திலும், துரோகம் கண்டு பொங்கும் இடத்திலுமாக  சிறப்பாக நடித்து அசத்தியிருக்கிறார்.

சர்ப்ரைஸான ஒரு கதாபாத்திரத்தில் ரித்விகா மிகச்சிறப்பாக நடித்து பயமுறுத்தி பரிதாபங்களையும் சம்பாதித்து விடுகிறார். 

சித்து சித்துவின் கீழ் காவலர் அழகுவாக டித்திருப்பவர், அட போட வைத்துவிடுகிறார்.

Dark Heaven தலைப்புக்கு ஏற்றவாறு முழுக்க முழுக்க இருட்டிலேயே காட்சிகளை படமாக்கி அற்புதமான விருந்து படைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ரசிகர்களுக்கு ல்ல ஒரு பொழுதுபோக்கு அனுபவத்தை கொடுக்கவேண்டும் என்கிற மெனக்கெடல் இயக்குனர் எஸ் பாலாஜியின் உழைப்பில் தெரிகிறது.

Dark Heaven, Heaven in Dark என்று சொல்லுமளவிற்கு விறுவிறுப்பான பொழுதுபோக்கு!