a K Vijay Anandh review
சினிமா மீது கொண்ட காதலால், தான் பார்த்துக்கொண்டிருந்த மார்கெட்டிங் வேலையை உதறிவிட்டு நண்பர்கள் உதவியுடன் 57 வயதில் தனது முதல் படத்தை, அதுவும் அற்புதமான கொஞ்சம் வித்தியாசமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயக்கியிருக்கும் தம்பிதுரை எதுராஜுக்கு முதலில் மனமார்ந்த வாழ்த்துகள். உண்மையில் நீங்கள் மட்டும் சாதித்திருக்கவில்லை, பலருக்கும் சாதிக்கும் எண்ணத்தையும் விதைத்திருகின்றீர்கள்.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கன்னடம் என்று நான்கு மானிலங்களிலுருந்தும் கதாபாத்திரங்களை நடிகர்களை தேர்வு செய்து, பென்களூருவில் நடைபெறுவதாக கதை அமைத்து அட்டகாசப்படுத்தியிருக்கிறார்கள்.
MRE Marketing Research Executive ஆக வேலைக்கு சேரும் நான்கு நண்பர்கள், அவர்கள் வேலைக்கு இண்டர்வியுக்கு வரும் காட்சி முதல் அத்தனையும் வேற லெவல் பொழுதுபோக்கு, முக்கியமாக மிகவும் யதார்த்தம். அத்துடன் அவர்களது அலுவலக தோழிகள், வெளியே சந்திக்கும் ஒரு பிரச்சினை என்று திரைக்கதை விறுவிறுப்பாக பயணிக்கிறது.
நமக்கு பிடிக்குதோ இல்லையோ , மார்கெட்டிங் இல்லாமல் உலகம் இயங்குவது மிகவும் கஷ்டம். அரசியல் முதல் அத்தனையையும் இங்கே மார்கெட்டிங் தான். இவ்வளவு ஏன், நம்மளை நாமே மார்கெட்டிங் செய்யத்தெரியாதவரை வாழ்க்கையில் அடுத்த அடி எடுத்து வைப்பது மிகவும் கடினம்.
ஊசி விற்பவர் முதல் கார் விற்பவர் வரை என்று மார்கெட்டிங் இல்லாத நாட்களை நம்மால் கடந்து போக இயலாது.
அப்படி மார்கெட்டிங் துறையில் இருந்து, படத்தில் வரும் காட்சிகள் பெரும்பாலும் தனது சொந்த அனுபவத்திலிருந்தே கோர்த்து கோல்ட் காலை அற்புதமாக இயக்கியிருக்கிறார் தம்புதுரை.