சண்டக்காரி

Rating 3/5

7

a K Vijay Anandh review

ஷ்ரியா சரண், தனுஷ் கூட  ஜோடியாக நடித்துவிட்டு அதன் பிறகு ரஜினியுடன் ஜோடியா நடித்தார். மறுபடியும் இளம் நாயகர்களுடன் நடித்து கொண்டிருக்கிறார், தற்பொழுது விமலுடன் சண்டக்காரியில் ஜோடியாக. 2001 இல் அறிமுகமாகி இன்றுவரை நாயகியாக நடித்துக்கொண்டிருக்கும் ஒரு சில நடிகையருள் இவரும் ஒருவர். அவரது பிட்னஸ் மற்றும் அழகை பார்த்தால், ஜென் சி தலைமுறை நாயகர்களுடனும் நாயகியாக நடிப்பார் போலும். அந்தளவுக்கு வசீகரமும் அழகும் இளமையும் அத்தோடு திறமையும் ஒருங்கே சேர்ந்த நடிகையாக ஷ்ரியா சரண், சண்டக்காரியில், ரசிகர்களை சொக்க வைக்கப்போவது உறுதி.

இவர், லண்டன் சென்றாலும் ஏன் ரஷ்யா சென்றாலுமே அதே மதுரை மண் வாசம், இவருடன் ஒட்டிக்கொண்டே இருக்கும். விமல், ஒரு வித்தியாசமான மதுரைக்காரனாக நடித்த்திருக்கிறார்.

தனக்கு கீழ் வேலை பார்க்கும் விமலுடன் திருமணம் செய்து கொண்டால் தனக்கு  லண்டன் குடியுரிமை கிடைக்கும் என்று திட்டமிடும் ஷ்ரியா சரண், நிரந்தர மதுரைக்கார மருமகளாகிவிடுவது தான் உணர்ச்சிகரமான கிளைமாக்ஸ்.

அந்தக்கால ஷ்ரியா சரண் என்று சொல்லத்தக்க கே ஆர் விஜயா விமலின் பாட்டியாக வருகிறார், இவரிடம் ஏதோ இருக்கு, அதே புன்னகை, அட புன்னகை அரசி அல்லவா!

விமலின் அப்பாவாக வரும் பிரபுவும், மகனுடன் முட்டல் மருமகளுடன் பாசமழை என்று சிறப்பாக நடித்திருக்கிறார்.

லண்டனில், பொழுதுபோக்கிற்கு சத்யன் உதவியிருக்கிறார்.

ஷ்ரியா சரண் இன் ரூம் மேட்டாக வரும் புன்னகை பூ கீதாவும் யதார்த்தமாக நடித்திருக்கிறார்.

ஆர் மாதேஷ், இவரிடம் நிச்சயம் நிறையவே எதிர்பார்த்திருப்பார்கள் ரசிகர்கள், சண்டக்காரி எல்லாம் அவர்களுக்கு சோளப்பொறி மாதிரி!