தேசிங்குராஜா 2.

mysixer rating 3/4

80

a  K. Vijay Anandh review

இசையை மட்டும் தான் பேரிரைச்சலாகக் கொடுக்கமுடியும் என்பது இல்லை , காமெடியையும் அதைவிட பேரிரைச்சலாக கொடுக்க முடியும் என்பதற்கு உதாரணமாக வெளிவந்திருக்கிறது தேசிங்குராஜா 2.

என்னதான் காமெடிப்படம் என்றாலும் சமகால நிர்வாகச்சீர்கேட்டை , அரசியல் அவலங்களை , தங்களது தகிடுத்ததத்தங்கள் வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காக அரசியல்வாதிகளால் கைமாறும் பல நூறுகோடிகளை காட்டி அதிரடித்திருக்கிறார்.

விமல் ஆய்வாளராக இருக்கும் ஒரு காவல் நிலையம் , புகழி ஆய்வாளராக இருக்கும் இன்னொரு காவல் நிலையம் இரண்டுக்கும் இடையே நடக்கும் மாமூல் வசூல் போட்டிகள் என்று ஒரே அமர்க்களம்.யார் அந்த புகழி ? படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் !

சாம்ஸ் , சுவாமிநாதன் , மதுமிதா KPY வினோத் , சிங்கம்புலி , மதுரை, முத்து, வையாபுரி , மொட்டை ராஜேந்திரன், கோதண்டம் என்று பெரிய காமெடி பட்டாளமே பட்டையை கிளப்பியிருக்கிறது.

தன நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் விமல் பணியாற்றும் காவல் நிலையத்தை கைப்பற்ற ஒரு கிழவி தன் கூட்டத்துடன் வந்து பஞ்ச் டயலாக்கில் பட்டுப்பாட விமல் மற்றும் சக காவலர்கள் எதிர்ப்பாட்டு பாடும் காட்சி செம.

இரண்டாவது நாயகன் ஜனா , நாயகிகள் பூஜிதா , ஹர்ஷிதா , அரசியல்வாதிகளாக ஆர் வி உதயகுமார் , பி சி அன்பழகன் ஆகியோர் சிறப்பாக நடித்த்திருக்கின்றனர்.

ரவிமரியா , இவர் இல்லாமலா ? இவரால் தான் கதை நகர்கிறது !

தேசிங்கு ராஜா 2, பொழுதுபோக்கில்ச்சக்கட்டம்.