MRS AND MR

mysixer rating 3.5'5

124

 a K.Vijay Anandh review

இது மேட்டர் படம் அல்ல, திருமணமான தம்பதியர் காலாகாலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் தள்ளிப்போட்டால் வாழ்க்கையே ரணகளம் தான் என்கிற நல்ல மேட்டரைச் சொல்லும் படம். இதற்கு ஏன் சாண்றிதழ் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை, ஆபரேஷன் டப்பா வில் , ராபர்ட் மடியில் குனிந்து வனிதா விப் காக விந்து சேகரிக்க முயலும் காட்சியில் கூட ஆபாசம் தெரியவில்லை.

Vanitha Vijayakumar as Vidhya

Robert Master as Arun

Shakila as Shakila

Powerstar as Power

Fathima Babu as Bama (Dhamu’s Wife)

Padma Bhushan Dr. Chef Dhamu as Psychiatrist Dhamu

Sriman as Baava

Kiran Rathore as Rupini

Aarthi Ganeshkar as Riya

Ganeshkar as Bang

Ravikanth as Ravi (Shakila’s father)

Anumohan as Sriman’s Father

Vasuki as Sriman’s Mother

Swetha Bharathi as Sandhya

Sowmya Jayaram as Sowmya (Vidhya’s friend)

Charmila as as kitty party friend #1

Gayathri Rema as delivery doctor

Nanjil Vijayan as drunk trespasser

D Balasubramani as Shakila Fanboy

Mahendra kumar Nahar as Panthalu

Balambika as delivery midwife

Gumtaj as Shakila Fanboy wife

Thangam as Riya’s assistant

Lakshmi as kitty party friend #2

Sai Sakthi as delivery male nurse

Otteri Siva as A/C mechanic

Master Hrithik Bharathi as Sandhya’s Son

Master Srinick as Samaadhaanam

28 க்கும் மேற்பட்ட நடிகர்களை வைத்து ஒவ்வொருவருக்கும் நினைவில் நிற்கும் படியான கதாபாத்திரம் கொடுத்து , தாய்லாந்திலும் சித்தூரிலுமாக முழுப்படத்தையும் விறுவிறுப்பாக கொடுத்திருக்கிறார், கதை, திரைக்கதை , எழுதி இயக்குமியிருக்கிறார் வனிதா விஜயகுமார்.

அவரது அம்மாவாக ஸ்டைலான ஒரு தொழிலதிபராகரும் , கிலா கதாபாத்திரமாகட்டும் , அவரது முறைமாமனாக வரும் ஸ்ரீமன் கதாபாத்திரமாகட்டும் சரியான மீட்டரில் பயன்படுத்தியிருக்கிறார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தில் ஷகிலாவையும் ஸ்ரீமனையும் பார்ப்பதில் மகிழ்ச்சி.

படம் முழுவதும் வரும் ஒரு நாயகியாக நடித்துக்கொண்டே படத்தையும் இயக்கியிருப்பதற்கு நிஜமாகவே ஒரு தனித்திறன் வேண்டும் , அது வனிதா விஜயகுமாருக்கு நிறையவே இருக்கிறது.வயது ஏற ஏற பெண்கள் சந்திக்கும் மெனோபாஸ் , மூட்டுவலி , கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகள் ஆகியவற்றை, ஃபாத்திமா பாபு தலைமையிலான பெண்களாக அமர்ந்து பேசி  வெளிப்படையாக பேசி விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய வனிதா விஜயகுமாருக்கு பெண் சமூகம் நன்றிக்கடன் பட்டிருக்கும்.

மனைவியை உருகி உருகி காதலிக்கும் வேடத்தில் ராபர்ட் மாஸ்ட்ரும் சிறப்பாக நடித்திருக்கிறார் . யார் குழந்தைக்கு யாரு அப்பா என்று சித்தூரில் வந்து கலாட்டா செய்யுமிடங்கள் அருமை.

ஜோவிகாவும் தயாரிக்க , ஷகிலா தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியிருக்கும் MRS AND MR  ஒரு தமிழப் படமாக அல்லாது , ஒரு சர்வதேச படமாகவே கொண்டுபோயிருக்கலாம் , இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால்.