குற்றம் புதிது

mysixer rating 3.5/5

222

a K. Vijay Anandh review

பொதுவாக ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படத்தின் சுவராசியமே, அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பது தெரியாமல் இருப்பது தான், விமர்சனத்தில் அடுத்து என்ன நடந்தது என்று சொல்லாமல் இருப்பதுதான்.

படம் ஆரம்பித்த ஐந்து நிமிடங்களுக்குள்ளாகவே இயக்குனர் நோவா ஆம்ஸ்ட்ராங், கதைக்குள் சென்று விடுகிறார். அம்மாவும் வெளியூர் சென்றிருக்கும் நிலையில், மகள் இரவு 11 மணி ஆகிறது இன்னும் வீடு திரும்பவில்லையே என்கிற பதைப்பதைப்புடனேயே மகளுக்கு போன் செய்யும் அசிஸ்டன்ட் கமிஷனர் மதுசூதனன்.

எப்பவுமே இப்படித்தானப்பா… என்கிட்ட ஒரு சாவி இருக்கு நீங்க நிம்மதியா படுத்து தூங்குங்க… என்று வாஞ்சையுடன் பதிலளிக்கும் மகள் சேஷ்விதா கனிமொழி.

காலையில் எழுந்து காபியுடன் மகள் அறையை தட்டும் அப்பாவிற்கு காத்திருக்கின்றது அதிர்ச்சி.

அந்த நொடியில் இருந்து நமக்கும் பரபரப்பு தொற்றிக் கொள்கிறது.

சேஷ்விதா கனிமொழி என்ன ஆனார் :7

மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் அசாத்தியமான ஒரு கதைக்களம் என்று குற்றம் புதிது ரசிகர்களுக்கு நிஜமாகவே ஒரு புதிய விருந்து படைத்திருக்கின்றது.

குறிப்பாக மதுசூதனன் பணியாற்றும் காவல் நிலையம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பணிபுரியும் இளம் காவல் அதிகாரிகள் குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான பெண் காவலர்கள் அவர்களது துடிப்பான புலன் விசாரணைகள் என்று புதிய அனுபவத்தை இந்த படம் கொடுத்திருக்கின்றது.

மிகவும் மிகவும் இயல்பாக அறிமுகமாகும் கதாநாயகன் தருண் விஜய். பி இ  படித்துவிட்டு, உணவு டெலிவரி செய்யும் இளைஞன். மிகவும் கட்டுக்கோப்பான உடல்வாகு, இயல்பான நடிப்பு என்று முதல் படத்திலேயே ஒரு முத்திரை பதித்திருக்கின்றார். அட கௌதம் ராம் கார்த்திக்கின், குளோன் பதிப்போ என்று நினைக்கும் அளவிற்கு, அவரைப் போலவே உயரம் நிறம் மற்றும் உடல் மொழி என்று வசீகரித்து இருக்கின்றார்.

கேஷ்விதா ,  ப்பா… என்ன ஒரு கண்ணுடா இது என்று ஏற்கனவே ஒரு ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்து விட்டு அவருக்கு இந்த படம் ஒரு முழு மீல்ஸ் சாப்பிட்ட திருப்தியாக அமைந்திருக்கும் என்றால் மிகை அல்ல. வெறுமனே ஒரு துறுதுறுப்பான ஹீரோயினாக மட்டும் அல்லாமல், பயம் அழுகை மென்மையான ஒரு காதல் என்று அட்டகாசப்படுத்தி இருக்கிறார். பொதுவாக நடிகர்களை இன்னவொருவருடன், ஒப்பிடுவது தவறு என்றாலும், தமிழ் திரையுலையில் அமலா பால் யாராலும் மறக்க முடியாத ஒரு திரை ஆளுமை. அவர் இல்லாத குறையை சேஷ்விதா நிவர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.

ராம்ஸ் , வழக்கம்போல வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்

குற்றம் புதிது, கதை சொல்லல் புதிது!!