காயல்

mysixer rating 3.5/5

146

a K. Vijay Anandh review

முதல் காட்சியிலேயே கட்டிக் கொடுக்கப்பட்ட மகள் தூக்கில் தொங்கிவிட்டாள் என்று போன் வருகிறது.

அதனைத் தொடர்ந்து ஏன் தூக்கில் தூங்கினால் என்பதாகத்தான் திரைக்கதை நகரும் என்று எதிர்பார்த்தால், அதற்கு முற்றிலும் மாறாக அந்த விஷயத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமலே  மகளின் காதல் , அது கை கூடாமல் போன துரதிஷ்டம் என்று திரைக்கதை பல்வேறு சுவராஸ்யங்களுடன் பயணிக்கிறது. ஆம் பயணிக்க தான் செய்கிறது, மகளின் அஸ்தியை சுமந்து கொண்டு மகன் மகனின் நண்பன் ஆகியோருடன் பயணிக்கிறது.

திட்டமிட்டபடி ராமேஸ்வரத்தில் மகளின் அஸ்தியை கரைப்பதற்கு அப்பாவின் அஸ்தியையும் சேர்த்து கரைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை.

மகளின் அஸ்தியை யார் கரைத்தார்கள் என்பது தான் உணர்ச்சி பெருக்கான இறுதிக்காட்சி.

இந்த மாதிரி லொகேஷன்களில் தான், கதை நகர வேண்டும் முடிவு செய்தாரோ என்னவோ, இயக்குனர் தமயந்தி மூலம் கதைகளை விட கதை களங்களின் அழகுகள் மேலோங்கி நிற்கின்றன. கிழக்கு கடற்கரையோர ரம்யமான இடங்களை ஒளிப்பதிவாளர் கார்த்திக், அற்புதமாக தனது கேமராவுக்குள் கொண்டு வந்து ஒரு விஷுவல் ட்ரீட்டாக இந்த படத்தை கொடுத்திருக்கிறார்.

நடிகர்களுக்கு வருவோம், ஐசக் மற்றும் அனு மோல் தங்கள் குழந்தையை பறிகொடுத்த பெற்றோர்களாக, அவர்களது சோகத்தை படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் கடத்துகிறார்கள். அனுமோலுக்கு மொத்த படத்திலும் ஒரு சில பக்க வசனம் தான். மற்றபடி முழுக்க முழுக்க தனது உணர்வுகளாலேயே அவரது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறார்.

காவல்துறை உயர் அதிகாரியாக வரும் ஐசக், மகளை பறிகொடுத்த வேதனையில் நொறுங்கிப் போய், தன் மனைவி சாதி பார்த்ததால் தானே தன் மகளை பறிகொடுத்து விட்டோம், என்கிற கோபத்தில் அந்த வயதிலும் மனைவியை விட்டு பிரிய முயலும் காட்சிகள் அருமை.

அமெரிக்காவிற்கு பிழைப்பிற்கு தான் போகின்றோம் , மற்றபடி வலது பூராம் இந்திய கலாச்சாரம் தான் என்று அவர்களது மகன் பேசும் இடம் அருமை.

நல்ல ஒரு உளவியல் மருத்துவராக ரமேஷ் திலக் சிறப்பாக நடத்தி இருக்கிறார். பிரசவத்திற்குப் போன மனைவி தன் குழந்தையை கூட காட்டவில்லை என்று புலம்பும் இடங்களிலும், பல வருடங்களுக்குப் பிறகு அவரது மகன் அவரை தொலைபேசியில் அழைக்கும் இடங்களிலும் சிறப்பான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தப் படத்திற்காக இல்லாவிட்டாலும் எம் எஸ் பாஸ்கர் போல இவருக்கும் ஒரு தேசிய விருது காத்திருக்கிறது.

லிங்கேஷ், இவர் சிரித்தால் மிக மிக அழகாக இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் அவரது சிரிப்பு சில மணித்துளிகளில் தொலைந்து போய்விடுகிறது. படம் முழுவதும் சீரியஸான இறுக்கமான முகத்தோடு வந்தாலும் ஒரு வசீகர நடிப்பை வெளிப்படுத்தி விடுகிறார்.

ஸ்வாகதா, கருப்பும் இல்லாமல் சிவப்பும் இல்லாமல் கோதுமை நிறத்தில் ஒரு அழகி. லிங்காவை உருகி உருகி காதலிக்கும் இடங்களில் காதலிச்சுத் தொலையேண்டா என்று ரசிகர்களை கத்த வைத்து விடுகிறார்.

ஜனனி,  இவரை மையமாக வைத்துதான் கதை நகர்கிறது, செல்லப் பிள்ளையாக, நல்ல காதலியாக,  தூக்கிட்டு தொங்கும் மனைவியாக கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை, சிறப்பாக செய்து விடுகிறார்.

அதே  நீர்தான், சாதி வெறியுடன் பார்க்கும் பொழுது சாக்கடையாக தெரிகிறது, சாதி வெறி நீங்கி தானாக கேட்டு வாங்கும் பொழுது, கங்கையாக தெரிகிறது.

உண்மையில் சாக்கடை நமது மூளைக்குள் தான் என்று அவ்வளவு நிமிடப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் பொட்டில் அறைந்தார் போல் சொல்லி விடுகிறார் இயக்குனர் தமயந்தி.

பொண்ணை கொடுங்கடான்னா, ங்கொய்யால அவளோட அஸ்தியை கொடுக்கிறாய்ங்க…

காயல், சர்வதேச திரைப்பட விழாக்களில் பார்த்து ரசிக்கும் படியான ஒரு அனுபவத்தை கொடுக்கிறது, காயல்.