a K Vijay Anandh review
தர்ஷன் , சார்மி இந்த இரண்டு இளம் நடிகர்களின் துணிச்சலான சரீர மாறுபாட்டு ஒப்பனைக்கு ஒரு பாராட்டுக்கள். அதிலும் தர்ஷனுக்கு இது முதல் படம், அறிமுகப்படுத்திய அட்டகாசமாக நடித்திருக்கிறார்.
ஆஜானுபாகுவான தர்ஷனும் அழகான சார்மியும் அவர்களது இயல்பான சரீரத்தை விடுத்து திரு நங்கையாகவும் திரு நம்பியாகவும் மாறிக் கொள்கிறார்கள்.
அது ஏன் ? எதற்கு ? எப்படி ? அப்படியே தொடர்கிறார்களா ? அல்லது இயல்பான சரீரத்தை பெறுகிறார்களா ? என்பதே சரீரம் படத்தின் வித்தியாசமான திரைக்கதை.
வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து இருப்பதுடன் அட்டகாசமான கருத்தை பதிய வைத்த விதத்தில் இயக்குனர் ஜி வி பெருமாளை பாராட்டி விடலாம்.
முன்பே குறிப்பிட்டது போல, தர்ஷனும் சார்மியும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
தாய் மாமனாக வரும் வில்லன் மனோஜ் மிரட்டி இருக்கிறார்.
ஷகிலா, அவர் ஏற்றிருந்த மருத்துவர் கதாபாத்திரத்தில், சின்ன சின்ன உடல் மொழிகள் மூலம் தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார்.
வழக்கமான நடிகர்களுடன், அதிக எண்ணிக்கையிலான திருநங்கைகளை முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து அவர்களுக்கும் சரி சமமான அந்தஸ்தை வழங்கி இருக்கும், ஜிவி பெருமாள், எல்லாவற்றிற்கும் மேல், மோசமான ஒரு காவல் ஆய்வாளராக நடித்து பெயர் வாங்கி இருக்கிறார்.
இறைவன் கொடுத்த சரீரத்தை தேவையில்லாமல் அறுவை சிகிச்சை செய்து மாற்றுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்கிற கருத்தை ஆழமாக பதிவு செய்திருக்கிறார்.
ஹார்மோன் சமநிலை மாற்றத்தால் ஏற்படும் பாலின மாற்றங்களுக்கு தேவையான அறுவை சிகிச்சைகள் செய்து கொள்வது போக, தேவை இல்லாமல் தங்களது சரீரங்களை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தி பாலின மாறுபாடு மற்றும் தோற்ற மாறுபாடு செய்து கொள்ளக் கூடாது, தொடர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளால் பாதிக்கப்பட்டவர்களில் பெரிய உதாரணம் மைக்கேல் ஜாக்சன் என்று சொன்னால் அது மிகை ஆகாது.
பெற்றோர்களின் தவறான முடிவுகளால் செய்யப்பட்ட பாலின மாற்று அறுவை சிகிச்சை மற்றும் எடுத்துக் கொண்ட மருந்துகளின் விளைவாக, பிறக்கும் குழந்தை பாதிக்கப்படுவதாக காட்டியிருக்கும் கிளைமாக்ஸ் அற்புதம்.
சரீரம், சரீரத்தை பற்றிய விழிப்புணர்ச்சி படம்!