Diesel

mysixer rating 4/5

135

a K. Vijay Anandh review

வாகனங்கள் முதல் தொழிற்சாலைகள் வரை பயன்படுத்தும் எரிபொருட்கள்,  டீசல் பெட்ரோல், தார் உள்ளிட்ட நிலத்திலிருந்து கிடைக்கும் கச்சா எண்ணெயிலிருந்து, பிரித்தெடுக்கப்படும் அத்தனை பொருட்களையும் உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் முறையான ஆலைகள் மற்றும் முறையான நெட்வொர்க்குகள் இருந்தாலும், அவற்றிற்கு இணையாக நிழலாக இன்னொரு நெட்வொர்க் இயங்குவது,  இயங்குகிறது என்கிற விஷயத்தை ரசிகர்கள் ஆச்சரியப்படும்படியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

திருடினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்கிற டேக் லைனடுனும் கொஞ்சம் மன்சாட்சியுடனும் நடந்து கொள்வது ஒரு ரகம்.

செய்யிறதும் திருட்டு, அதிலும் பல்வேறு கலப்படம், ரெளடியிசம் என்று மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுவது யாரும் விரும்பாத ரகம்.

அப்படி டீசல் வாசுவாக வரும் ஹரிஷ்கல்யாணுக்கும்  நந்தகோபாலாக வரும் விவேக் பிரசன்னாவுக்கும் இடையே நடக்கும் முட்டல்  மோதல்கள், இவர்கள் மட்டுமல்லாது, துறைமுகம் மற்றும் ஒட்டுமொத்த எரிவாயு பொருளாதாரத்தையே ஆட்டிவைக்கும் பெருமுதலாளி சச்சின் கேடெகர் என்று விறுவிறுப்பாக , இன்னும் சொல்லப்போனால் எண்ணெய்க்கிணறு பற்றி எரிவது போன்று நகர்கிறது திரைக்கதை.

சாய்குமார், பிரேம்குமார், வினய், அனன்யா, ரமேஷ் திலக் – சரண்யா, காளிவெங்கட், தங்கதுரை, தீனா என்று திறமையான நடிகர்கள்  தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கின்றார்கள்.

நாயகன் ஹரிஷ் கல்யாணைப் பொருத்தவரை, அவரது கேரியரில் மிகவும் சீக்கிரமாக பெரிய சுமையை ஏற்றிவைக்கப்பட்டாலும் அதனை திறம்பட கையாண்டு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

அதுல்யா ரவி, அட்வகேட்டாகவும் அழகான காதலியாகவும் அதைவிட அதிகமாக பொறுப்பான இளம்பெண்ணாக வந்து அசத்தியிருக்கிறார்.

அவருக்கு வரும் கடல்கன்னி சம்பந்தப்பட்ட கனவுகள், அந்த நடுக்கடல் படகு பயணம் அருமை.

சரியான காலகட்டத்தில் இந்தப்படம் வெளியாகியிருந்தால், இயக்குநர் சண்முக முத்துசாமி இன்னொரு ஷங்கராக அறியப்பட்டிருக்கலாம்!

டீசல்,  நம்மைச்சுற்றியுள்ள பொருளாதார – வாழ்வாதா வலைப்பின்னல்களை கிழிக்கும் படம் !