OTHERS

mysixer rating 4/5

134

a K Vijay Anandh review

ஒரு மனிதனின் ஆயுள் காலத்தில் பள்ளியில் சேரும்போதிலிருந்து ஒவ்வொரு விஷயத்திலும் கேட்கப்படும் ஒரு கேள்விதான், படத்தின் டைட்டில்.

படத்தின் தலைப்பை படத்தின் இரண்டாவது பாதியில் நடுவில் ஒரு முக்கியமான இடத்தில் திரையில் போடும்பொழுது நிச்சயமாக ரசிகர்களுக்கு ஒரு புது அனுபவத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் அபின் ஹரிஹரன்.

“ஒரு அரிதானதை சாதாரணமாக்க, அதன் எண்ணிக்கையை பெருக்கினால் போதும் என்று உருவாக்கிய இந்த சிந்தனைக்கு யார் பொறுப்பேற்பது ?”

இந்த ஒரு வரி தான் மொத்த படத்தின் கதையும் . இதில் நேர்மறையும் அடங்கி இருக்கின்றது ..எதிர்மறையும் அடங்கி இருக்கின்றது …

இயக்குனர் அபின் ஹரிஹரன் எதிர்மறையை எடுத்துக்கொண்டு சமூகத்தில் ஏற்படுத்தும் மோசமான பின் விளைவுகளைப் பார்த்து அனைவரும் பயப்படும்படியாக மிரட்டலாக சொல்லி இருக்கிறார்.

டேனியல் பாலாஜிக்கு அருமையான ஒரு மாற்றாக ஒரு நடிகரை, தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்திருக்கிறார்களோ என்று என்ன தோன்றும் அளவிற்கு, இயக்குனர் அபின் ஹரிகரன் இந்த படத்தில் ஒரு சிறந்த நடிகரை தமிழுக்கு கொண்டு வந்திருக்கிறார். மனிதர் இரண்டாவது பாதியில் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிகளில் ரசிகர்களை, தன் பக்கம் இழுத்துக் கொள்கிறார்.

நாயகன் ஆதித்ய மாதவன், அனுபவ நடிகர்களுக்கே வராத சின்ன சின்ன அருமையான உடல் மொழிகளுடன் மிடுக்கான, அசிஸ்டன்ட் கமிஷனர் வேடத்தை ஏற்று அற்புதமாக நடித்திருக்கிறார்.

கௌரி கிஷன், நேற்று பள்ளிக்கூடம் சென்று கொண்டிருந்தவர், அட அதற்குள்ளாக ஒரு சிறந்த கைனகாலஜிஸ்ட் மருத்துவராக ஆகிவிட்டாரா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் இருந்து பொறுப்பான மருத்துவர் கதாபாத்திரத்தின் உடல் மொழியை அற்புதமாக கொண்டு வந்திருக்கிறார்.

முனிஷ் காந்த், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர்ர் தங்களது கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

இன்றைய காலகட்டத்தில் இதுபோல தமிழ் சினிமாவில் எடுக்க முடியுமா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு, கிறிஸ்துவ விடுதிகளில் நடக்கும் தனிமனித அத்துமீறல்களை அற்புதமாக கருவாகி அதனை சரியாக நேர்மையாக காட்டி துணிச்சலான ஒரு படமாக, அதர்ஸ் ஐ கொடுத்திருக்கிறார் அபின் ஹரிஹரன்.

இயல்பான மனிதர்களாக இருந்து கொண்டும், தவறான விஷயங்களுக்கு துணை போகும் ஜெகன் மற்றும் வினோத் சாகர் ஆகியோருக்கு திரைகதைப்படி மரண தண்டனையும், உண்மையான குற்றவாளி வேதா தான் எனினும், ஒரு ஷாட்டில் அவர் குற்ற உணர்ச்சியால் மனம் திறந்து விடுவார் என்கிற நிலையில் அவரை சட்டத்தின் முன் நிறுத்துவதும் அழகான கிளைமாக்ஸ்.

குறிப்பாக நாயகன் ஆதித்ய மாதவன், கிளைமாக்ஸ் இல் ஆடை கிழிந்த நிலையில் கீழே விழுந்து கிடக்கும் வேதாவின் மேல் ஒரு துண்டை போர்த்தும் இடம் அட்டகாசம்.

அந்த காட்சியில் இருந்து முழு படத்தையும் ஆரம்பித்திருக்கலாம் என்று கூட தோன்றியது!

Others, படத்தின் தலைப்பாக இருக்கலாம் ஆனால் நிச்சயமாக இதனை an another film என்று சொல்லிவிட முடியாத அளவிற்கு சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.