கிறிஸ்டினா கதிர்வேலன்

mysixer rating 3.5/5

408

a K Vijay Anandh review

சமீபத்தில், கோயம்புத்தூரில் ஒரு துயர சம்பவம் நடைபெற்றது. தனது ஆண் நண்பனுடன் சென்ற இளம்பெண், கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளாகி இருப்பதும், சிகிச்சை பெற்று வரும் அவரது ஆண் நண்பன் அவரையே திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிந்து கொள்ள முடிகிறது.

அப்படி இருந்தால் நிச்சயமாக அந்த இருவரும் இந்த துயர சம்பவத்திலிருந்து மீண்டு புது வாழ்க்கையை, மகிழ்ச்சியுடன் கழிக்கட்டும், அதற்கு நாமும் பிராத்திப்போம்.

அந்த சம்பவத்திற்கும் கிறிஸ்டினா கதிர்வேலன் படத்திற்கும் என்ன சம்பந்தம்..? ஆச்சரியப்படும் வகையில் இந்த படத்தின் இறுதிக் காட்சி கடந்த வாரம் நடந்த அந்த துயர காட்சியை 100% ஒத்து இருக்கிறது என்பது… உண்மையாகவே வியப்பிலும் வியப்புதான்!

இயக்குனர் எஸ் ஜே என் அலெக்ஸ் பாண்டியனுக்கும் இசையமைப்பாளர், என் ஆர் ரகுநாதன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர்களுக்கும் பாராட்டுக்கள்.

நாயகனாக நடித்த கௌஷிக் ராம், நாயகியாக நடித்திருக்கும் பிரதீபா இருவரும் 90களில் வந்த கிளாசிக் காதல் கதைகளை நினைவுபடுத்தும் விதமாக மிகவும் எதார்த்தமாகவும் அழுத்தமாகவும் நடித்திருக்கின்றார்கள்.

2011 இல் நடக்கும் கதை என்பதாக முதலிலேயே தெரியப்படுத்தி விடுவதால் மெதுவாக நகரும் கதைக்கு நம்மை தயார் படுத்திக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

ஆரோல் டி சங்கர், கஞ்சா கருப்பு, ஜெயக்குமார் , டி எஸ் ஆர் உள்ளிட்ட பலரும் நாயகனின் நண்பர்களாக வருபவர்களும் நாயகியின் தோழியாக வருபவர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

மாற்றுத்திறனாளியான சரவணாவர்ஷன், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார், தனது உடல் பலத்தால் வில்லன்களை பழிவாங்க முடியாத நிலையிலும் தன் உயிர் போனாலும் பரவாயில்லை அவர்களையும் எரித்து சாம்பலாக்குவோம் என்று முடிவு செய்யும் இடம் அற்புதம்.

14 வருடங்களுக்கு முன்பாக நடந்த கதை என்பதாக  இந்த படம் 2025-ல் வெளியாகியிருக்கும் நேரத்தில் ஒரு உண்மை சம்பவத்துடன் ஒத்துப்போவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

எந்த சூழ்நிலையிலும் தான் விரும்பியவர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தை விதைக்கும் படமாக வெளியாகி இருக்கும் கிறிஸ்டினா கதிர்வேலன்,  இளைஞர்களுக்கு பிடிக்கும்.