தாவுத்

mysixer rating 3/5

102

a K Vijay Anandh review

லிங்கா, அப்பாவி கார் டிரைவர் தம்பித்துறையாகவும் அதிரடியான டான் தாவுத் ஆகவும் நடிப்பதற்கு நான் ரெடி, என்று பொக்கே கொடுத்து சொல்லி இருக்கிறார். இவர் கொடுக்கும் பொக்கே வாங்குபவர்களுக்கு எமன் என்பது படம் பார்ப்பவர்களுக்கு புரியும், எதற்கு கொடுக்கிறார் என்பதும்!

பணத்தேவை உள்ள அப்பாவி இளைஞன், ட்ரக் சப்ளை செய்யும் தாவூத், அதனை தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் விநியோகம் செய்ய போட்டி போடும் மூர்த்தி மற்றும் விசாகம், அவர்களுக்கு உதவி செய்யும் காவல்துறை ஒரு பக்கம் , வேட்டையாடுவதற்கு தேடும் காவல்துறை இன்னொரு பக்கம் இப்படி ஒரு முக்கோண களத்தில் தாவுத் பயணிக்கிறது.

மூர்த்தியாக சாய் தீனா,  விசாகமாக அபிஷேக் ஆளாளுக்கு அடியாட்கள் வைத்துக்கொண்டு மிரட்டி இருக்கிறார்கள்.

அர்ஜய், ஆனந்த் நாக் உள்ளிட்ட இளம் நடிகர்கள் துடிப்பான இளம் காவல்துறை அதிகாரிகளாக கலக்கி இருக்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் மேலதிகாரியாக ராதாரவி, கம்பீரம் மற்றும் மிடுக்கு, பயிற்சியில் வருவது ஒரு பக்கம் இவர்களுக்கெல்லாம் அனுபவம், என்ன கதாபாத்திரம் ? என்ன காஸ்ட்யூம்..? அவ்வளவுதான் மற்றவற்றையெல்லாம் நொடிப் பொழுதில், கேமராவுக்கு கொண்டு வந்து அசத்தி விடுவார்கள். ராதாரவி,  ஒரு பொக்கிஷம்.

சாரா ஆச்சர், விதம் விதமான கெட்டப்புகளில் வரும் ஒரு கலர்ஃபுல்லான கதாநாயகி. அவர் வரும் காட்சிகள் எல்லாமே அழகு.

நகைச்சுவை நடிகர் சாரா, புதுவிதமாக ஒன்றை முயற்சி செய்திருக்கிறார், நமது ஆன்மீகம் சார்ந்த விஷயங்களாக இருந்து அவை சில நேரங்களில் முகம் சுளிக்க வைத்தாலும், அதனை சரிகட்டும் விதமாக நாயகன் லிங்கா விபூதியும் முருகன் இருப்பது அமைந்திருக்கிறது.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் பிரசாந்த் ராமன் புத்திசாலிதான்.

 

பி.கு:

தாவுத், இந்த பெயர் இந்தியாவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட ஒரு பெயர். அந்த பெயருக்கெல்லாம் கிரெடிட் கொடுக்கும் விதமாக சினிமா தலைப்பில் வைப்பது சரியானது அல்ல என்று தோன்றுகிறது. ஒரு கதாபாத்திரத்திற்கு பெயர் வைப்பது வேறு படத் தலைப்பாகவே வைத்து அந்த பெயரை பிரபலப்படுத்துவது என்பது வேறு.

தம்பிதுரை கூட நல்ல தலைப்பு தான், ரஜினிகாந்தின் தர்மதுரை போல!