தீயவர் குலை நடுங்க

mysixer rating 3.5/5

54

a K Vijay Anandh review

ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் ஆக்ஷன் பிரின்சஸ் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் தீயவர் குலை நடுங்க என்று சொல்லலாம். அந்த அளவிற்கு, தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் சண்டை காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.இவர் சண்டை போட்டதற்கு பிறகுதான் அர்ஜுன் சண்டை போடுகிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பெண்மையை முன்னிறுத்திய ஆக்சன் கிங் அர்ஜுனுக்கும், சண்டை பயிற்சியாளர் காளிக்கும் படத்தை இயக்குனர் தினேஷ் லட்சுமணனுக்கும் பாராட்டுக்கள்.

ஒரு எழுத்தாளர் படுகொலை செய்யப்படுகிறார், அதை துப்பு துலக்க ஆரம்பிக்கும் அர்ஜுனுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன.

சாதாரணமாக ஒரு மேட்ரிமோனியல் தளம் மூலம் காதலனை கண்டறியும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது.

இரண்டு அதிர்ச்சிகளும், ஒரு புள்ளியில் நிறைவடைகின்றன.

சைல்டு அப்யூஸ் என்கிற சமூக அவலத்தை மையப்படுத்தி ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ஆக இந்த படத்தை இயக்கியிருக்கிறார் தினேஷ் லட்சுமணன்.

சாய் பல்லவிக்கு ஒரு கார்க்கி என்றால் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு தீயவர் குலை நடுங்க என்று சொல்லலாம். இருவருமே தங்களுக்கு சம்பந்தமில்லாத ஒரு குழந்தை பாதிக்கப்பட்ட நிலையிலும் அதற்கு நீதி வாங்கிக் கொடுக்கிறார்கள்.

நல்ல வேளையாக, பாலியல் சீண்டலுக்கு உட்பட்ட சிறுமியை அலங்கோலமாக காட்டி அசிங்கப்படுத்தி விடக்கூடாது என்று கவனமாக காட்சிகளை அமைத்த தினேஷ் லக்ஷ்மணன் க்கு பாராட்டுக்கள்.

காவல்துறை அதிகாரி மகுடபதியாக அர்ஜுன், மிகவும் அசால்டாக நடித்து அசத்தி விடுகிறார்.

சிறப்பு குழந்தைகளின் ஆசிரியராக வரும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு ,   வழக்கம்போல ஒரு வித்தியாசமான கதை பாத்திரம், வழக்கம்போல சிறப்பான நடிப்பு.

சிறப்பு குழந்தையின் அம்மாவாக வரும் அபிராமி,  தாத்தாவாக வரும் வேலராமமூர்த்தி ஆகியோர் கவனிக்க வைக்கிறார்கள்.

ஒரு பாரம்பரியம் உள்ள குடும்பத்திலிருந்து வந்திருக்கும் ராம்குமார் இதுபோன்ற கதாபாத்திரங்களை தவிர்த்து இருக்க வேண்டும், நன்றாக நடித்திருக்கிறார் என்பது வேறு விஷயம்!

மற்றபடி, சமூகத்தில் நடக்கும் உண்மை சம்பவத்தின் பிரதிபலிப்பாக தான் இந்த படம் வெளியாகியிருக்கிறது.

அப்பார்ட்மெண்ட் இல் வசிக்கும் குறிப்பாக பல அடுக்குமாடிகளை கொண்ட அப்பார்ட்மெண்டில் வசிக்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்ச்சியை இந்த படம் ஏற்படுத்துகிறது.

இது போன்ற குற்ற செயல்கள், அதாவது சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்க வேண்டும் என்பது அல்ல, அவர்களது அந்தரங்க உறுப்புகளில் கை வைத்தாலே அது பாலியல் வன்புணர்வுக்கு சமமானதே.

அந்த வகையில், யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருந்த அது போன்று செயல்களை செய்தவர்களுக்கு , ஒரு லேசான நடுக்கத்தை கொடுப்பதே பெரிய தண்டனை தான். அப்படி ஒரு நடுக்கத்தை தீயவர் குலை நடுங்க கொடுக்கும்!