a K Vijay Anandh review
பொதுவாக, பெண் உடம்பில் இறங்கிக் கொள்ளும் பேய் அதன் ஃபிளாஷ்பேக் என்று சம்பந்தப்பட்டவர்களை கொள்வதாக தான் பேய்ப்படங்கள் வெளியாகும்.
ஆனால், இந்தப் படத்தில் ஒரு சுவாரசியமான ட்விஸ்ட்டை வைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் எம் ராஜேஷ் பாரதி.
நாயகன், ரஜினி கிஷன், இவருக்கு நகைச்சுவை நன்றாகவே வருகிறது. டைமிங்கில் அசத்துகிறார். அது கதாநாயகி உடன் ஆகட்டும் அல்லது கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் ஆகட்டும்.
நாயகி துவிவிகா, அழகான காதலியாகவும் அதிரடியான பேயாகவும் வந்து ரசிகர்களை சொக்க வைத்து விடுகிறார்.
முனிஷ்காந்த், படத்திற்கு படம் தான் ஏற்றுக் கொள்ளும் கதாபாத்திரங்களில் அடிப்படையான ஒரு வசன உச்சரிப்புகள் இருந்தாலும் வித்தியாசமான உடல் மொழிகளை புகுத்தி ரசிகர்களை மகிழ்வித்து விடுகிறார். இந்த படத்தில் ஒரு கார் திருடனாக வந்து இவர் செய்யும் ரகளை அட்டகாசம்.
ஒரு பக்கம் அமைச்சரின் கார் கனகா திருடு போக, இன்னொரு பக்கம் ஊர் தலைவரின் மகளை ஒருவன் தள்ளிக்கொண்டு போக, தனது முறைப்பெண்ணை ஒருவன் தேடிக் கொண்டு வர, ஒரு கட்டத்தில் அந்தப் பெண்ணிற்கு பேய் பிடிக்க என்று காரசாரமான புல் மீல்சை பரிமாறி இருக்கிறார் இயக்குனர்.
கூல் சுரேஷ், சமூக வலைத்தளங்களில் இவர் ஒரு நகைச்சுவையாளராக அறியப்பட்டாலும் இவருக்குள் ஒரு அட்டகாசமான குணச்சித்திர நடிகர் ஒளிந்து இருக்கிறான் என்பதை இந்த படம் வெளிச்சம் போட்டு காட்டும். வெந்து தணிந்தது காடு… என்கிற தனது அக்மார்க் அடையாள வசனத்தை ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக பயன்படுத்தி ரசிகர்களுக்கு தீனி போடுகிறார்.
கல்கி, திருட்டு தாலி மூலமாக கலகம் விளைவிக்கும் நபராக அட்டகாசப்படுத்தி இருக்கிறார்.
ஜே ஸ்கொயர் , அதாவது பேய் விரட்டும் ஜடாமுடி ஜம்புலிங்கமாக வரும் மொட்டை ராஜேந்திரன் மற்றும் குழுவினர் , அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்கள் அவர்கள் செய்யும் பூஜைகள் ஆகியவை வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கின்றன.
ரஜினி கேங் , சிறந்த பொழுதுபோக்கு!