SAARAA

mysixer rating 2.5/5

51

a K. Vijay Anandh review

குணா , காதல் கொண்டேன் போன்ற படங்களை பார்த்து இது போல ஒரு படம் பண்ண வேண்டும் என்று நினைத்தாரோ என்னவோ…

செல்லக்குட்டி, அட  இயக்குனர் பெயர் தாங்க, அதுபோல ஒரு படத்திற்கு முயற்சி செய்திருக்கிறார்.

தோழியை எப்படி காதலியாக ஏற்றுக் கொள்வது என்கிற ஆழமான கேள்வியால் இந்த படம் கொஞ்சம் மாறுபட்டு தருகிறது.

ஆனாலும், அம்மாவிற்காக என்று வரும் பொழுது எல்லாமே அடிபட்டு போய்விடும் தானே!

பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி, தலைமை பொறியாளர் சாக்சி அகர்வால், செயல் அதிகாரி விஜய் விஸ்வா, கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தில் பணியாற்றும் ரோபோ சங்கர் தங்கதுரை அவர்களுடன் தரமற்ற மணலை சப்ளை செய்யும் மிரட்டல் செல்வா என்று முதல் பகுதி வேறு ஒரு தளத்தில் பயணிக்கிறது.

சண்டை பயிற்சியை இயக்குனர் மிரட்டல் செல்வா, வில்லனாக வந்து மிரட்டி இருக்கிறார்.

அலுவலகத்தில், சாக்சியை,  தனது அறைக்கு அழைத்து, விஜய் விஷ்வா டீஸ் செய்வதுபோல ஆரம்பித்து அவர்கள் காதலர்கள் என்று தெரிய வரும் காட்சிகள் அழகு.

அத்துடன், சாக்ஷி அகர்வாலின் கெட்ட கனவு, பொன்வண்ணன் மற்றும் குடும்பத்தினர் கருப்பன் கோயில் என்று ரசிகர்களை வேறு ஒரு கோணத்தில் இழுத்துச் செல்கிறார்கள்.

இரண்டாவது பாதியை, செல்லக்குட்டி முழுவதுமாக ஆக்கிரமித்து விடுகிறார். இரண்டாவது பாதியில் ஆரம்பிக்கும் ஒரு குத்தாட்ட  பாடலில் இருந்து.

இளவட்ட ஆனந்தராஜை பார்ப்பது போல இருக்கும் செல்லக்குட்டி, பட ஆக்கத்தில் இன்னும் கொஞ்சம் நேர்த்தியை கையாண்டிருந்தால் இந்த படமும் பேசப்படும் படமாக மாறி இருக்கக்கூடும்.

சாரா, முழுக்க முழுக்க இயக்குனர் செல்லக்குட்டியின் தன்னம்பிக்கை!