திரௌபதி 2

mysixer rating 5/5

340

a K. Vijay Anandh review

இவ்வளவு குறைந்த முதலீட்டில், குறைவான நாட்களில்,  திறமையான அதே நேரம் – பெரிய வணிக ஓப்பனிங் இல்லாத நடிகர்களை வைத்துக்கொண்டு இவ்வளவு பிரமாண்டமான ஒரு படத்தை கொடுக்க முடியும் என்றால் அதுதான் திரௌபதி 2.

கதை மற்றும் திரைக்கதை அளவில் கசப்பான வரலாறுகளை நினைவுபடுத்தி இந்துக்களை எச்சரிக்கை செய்த விதத்தில் திரௌபதி 2 பிரம்மாண்டத்தின் உச்சம் என்று சொல்லலாம்.

இன்றிலிருந்து என்னூறு வருடங்களுக்கு முன்பு, இந்த தேசத்தை கொள்ளை அடிக்க வந்த அரேபிய கொடுங்கோலர்களுக்கு நான்கு நோக்கங்கள் இருந்தன.

ஒன்று, ஹிந்துக்களின் நிலங்களை அபகரித்து ஹிந்து ஆலயங்களின் சொத்துக்களை திருடுவது.

இரண்டு, ஹிந்து பெண்களின் கற்புகளை சூறையாடுவது.

மூன்று, அவர்களின் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களை கொடூரமாக கொன்று குவிப்பது.

நான்கு, இந்துக்களாகவே தொடர வேண்டும் என்று விரும்பும் சிற்றரசர்கள், ஜிஸியா வரி கட்ட வேண்டும் என்று இந்துக்களின் வருமானத்தை பிடுங்கிக் கொள்வது.

1200 ஆண்டுகள் போராடி அந்த அரேபிய இஸ்லாமிய கொடுங்கோலர்களையும், லண்டன் கிறிஸ்தவ ஆட்சியாளர்களையும் விரட்டி அடித்த நிலையிலும் 1947 க்கு பிறகும் இந்த நான்கு விஷயங்களும், அந்நிய சித்தாந்த அடிமை ஆட்சியாளர்களால் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறதோ என்று எண்ணும் அளவிற்கு சிறுபான்மை நலன் என்கிற ஓட்டு வங்கி அரசியல் நடத்தும் ஆட்சியாளர்கள் நடந்து கொள்கிறார்கள்.

அப்படி, வக்பு சொத்துக்கள் என்கிற பெயரில் தேச முழுவதும் பல லட்சம் கோடி மதிப்புள்ள பல லட்சம் ஏக்கர் நிலங்கள் அந்நிய சித்தாந்த அடிமை ஆட்சியாளர்களின் உதவியோடு ஆட்டையை போடப்படுகின்றன.

அப்படி, மாட்டிக்கொண்ட பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மையான ஒரு இந்து கோயிலை புனரமைக்கும் முயற்சியில் பிளாஷ்பேக் ஆக திரௌபதி 2 கதை விரிகிறது.

திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வரும் வீரவல்லாள மகாராஜாவாக, நடராஜ் சுப்ரமணியம், அவரது நம்பிக்கைக்குரிய படைத்தளபதிகளில் ஒருவரும், பின்னாளில் மன்னர் வீரசிம்ம காடவராயனாக மாறும் ரிச்சர்ட் ரிஷி, அவரை கரம் பிடிக்கும் அந்நாளைய வீரமங்கை வேலு நாச்சியார் திரெளபதி  தேவியாக, ரக்ஷனா இந்துச்சூடன் இந்த மூவரையும் மையமாக வைத்து இந்த படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கிறது.

வயோதிகத்தால் இன்னும் முடங்கி விடாத நிலையிலும்,  சாகும்வரை ஆட்சியில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படாமல், 80 வயது ஆயிற்று தனது அதிகாரங்களை அடுத்த தலைமுறை இடம் ஒப்படைக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்ட ஆட்சியாளரை இந்த படம் அடையாளம் காட்டுகிறது.  தன்னிடம் இருக்கும் சிறிய படங்களை கொண்டு மூர்க்கத்தனமான அலாவுதீன் கில்ஜியின் பேரரசை எதிர்க்கப் போராடும் வீர வள்ளலாள மகாராஜாவாக நடராஜ் சுப்பிரமணியம் அற்புதமாக நடித்திருக்கிறார்.

நமது மண்ணையும், பெண்ணையும் இந்த இரண்டிற்கும் மேலான இந்த மண்ணின் ஆன்மிகத்தையும்  காப்பாற்ற போராடும் களத்தில், அரேபிய இஸ்லாமியர்களால் கொடூரமாக கொல்லப்படுகிறார்.

தனது பாதுகாப்பில் இருந்த நமது மன்னர் அரபிய இஸ்லாமியர்களின் சூழ்ச்சியால் கொல்லப்பட்டதை ஏற்றுக் கொள்ள முடியாத காடவராயரும், தன் உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுக்க, இளவரசரை காப்பாற்றும் கடமையும் மன்னர் தனக்கிட்ட சில கட்டளைகளை நிறைவேற்றும் பொறுப்பும் இருப்பதால், தனது சாவை தள்ளிப் போடுகிறார்.

ஹொய்சாள பகுதிகளை ஆக்கிரமித்து இளவரசன் விருபாக்ஷனை அலாவுதீன் கில்ஜியின் அடிமை அரசு கொடூரமாக சிறைப்படுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கி இருப்பதை அறிந்து யானைகளையும் பூனைகளையும் பயன்படுத்தி அவரை மீட்கும் இடங்கள் அருமை.

நாம் இன்னமும் தோற்றுக் கொண்டிருப்பது எதிரிகளை விட நம்முடைய இருக்கும் துரோகிகளால் தான் என்பதை நினைவுபடுத்தும் விதமாக, ரிச்சர்ட் ரிஷியின் நண்பனாக, திரௌபதி தேவியின் அரசவையில் இருக்கும் ஒரு கதாபாத்திரத்தின் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

மீனாட்சி ஆண்ட மதுரையில் அரேபிய கொடுங்கோலர்கள் எத்தனை எத்தனை கொடுமைகளை அரங்கேற்றி இருக்கிறார்கள் என்பதை கண்முன் கொண்டு வந்திருக்கிறார். சிறுமிகள் கற்பழிக்கப்படுவது முதல் ஷியாவரி என்கிற கொடூர வரிவிதிப்பு வரை எவ்வளவு பாதிக்கப்பட்டும் இன்னும் நம் நாட்களுக்கு புத்தி வரவில்லையோ என்று வருத்தப்பட தோன்றுகிறது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் விளக்கேற்றுவது வரை இன்னமும் இந்துக்கள் போராடிக் கொண்டிருப்பது, இஸ்லாமிய கொடுங்கோலர்களுக்கு எதிரான போராட்டங்களின் நீட்சியோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழ்நாட்டிற்கும் ராமருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கும் அறிவிலிகளின் மூளையில் ஆணி அடித்து சொல்லும் விதமாக, ஒய் ஜி மகேந்திரன் அவரது கூட்டாளிகள் மற்றும் பரணி அவரது மனைவி சம்பந்தப்பட்ட காட்சிகளை, நிஜமாக நடந்த சம்பவங்களை மையப்படுத்தி அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்.

கோவிந்தனை வழிபடும் நான் எப்படி மற்ற கடவுளர்களை ஏற்றுக் கொள்வேன் என்று கதறும் இடங்களிலும், ஏதோ உன்னுடைய கொடுமைகள் தாங்காமல் நான் மதம் மாறி இருக்கிறேன் ஆனால் என் உடம்பில் ஓடுவது இந்த தேசத்தின் ரத்தம், நீயும் நானும் இப்பொழுது ஒரே இறைவனை வழிபடலாம் ஆனாலும் நீ வேறு தேசம் நான் வேறு தேசம் , நான் எனது தேசத்தின் பக்கம் தான் நிற்பேன் என்று நிற்கும் இடங்களிலும் இஸ்லாமியராக மாறிவிட்ட கோவிந்தன் என்கிற பரணி சிறப்பாக நடித்திருக்கிறார், அந்த இடங்களில் கைதட்டுகளும் இயல்பாக எழுகின்றன. மதத்தை அடிப்படையாக வைத்து எல்லை தாண்டிய தீவிரவாதங்களுக்கு துணை போகாமல் இந்திய தேசத்தை நேசிக்கும் இஸ்லாமியர்களுக்கு மரியாதை செய்து இருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி.

திரௌபதி தேவியாக நடித்திருக்கும் ரக்ஷனா இந்துச்சூடன், அழகும் வீரமும் தியாகமும் கொண்ட அற்புதமான கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கவும் செய்கிறார்.

பெண்களின் தியாகமும் போற்றப்பட வேண்டியதே…. ஒன்றே குலம் ஒருவன் அல்ல தேவன் … உள்ளிட்ட அற்புதமான வசனங்களை எழுதி இந்த படத்தை மேலும் விறுவிறுப்பாக இருக்கிறார் எழுத்தாளர் பத்மா சந்திரசேகர். 800 வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் ஆயினும், இன்றைய தலைமுறை புரிந்து கொள்ளும் பொருட்டு எந்தவிதமான பிற மொழி கலப்பில்லாமலும் நேர்த்தியாகவும் எழுதப்பட்டிருப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. அதனை நடராஜன் சுப்பிரமணியம், ரிச்சர்ட் ரிஷி மேலும் ராஜா நாராயணனாக வரும் வேலராமூர்த்தி போன்றோர் பேசும் பொழுது மிகவும் ரசிக்க முடிகிறது.

ஜிப்ரானின் இசையில் பாடல்களும் பின்னணி இசைகளும் இனிமையாக இருக்கின்றன.

பிலிப் ஆர் சுந்தரின் ஒளிப்பதிவும் அருமை.

இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வந்த பிறகு, மனதில் தோன்றும் எண்ணம் ஒன்றே ஒன்றுதான்.

” கடந்த 1200 ஆண்டுகளில் இந்த மண்ணை சூறையாடியது மட்டுமல்லாமல், அரேபிய இஸ்லாமிய கொடுங்கோலர்கள் வாள் முனையிலும், இந்த நாட்டை கொள்ளை அடிக்க வந்த லண்டன் கிறிஸ்தவர்கள் துப்பாக்கி முனையிலும்  மரண பயத்தை காட்டி மதம் மாற்ற முயன்றாலும், அவர்களுக்கு அஞ்சாமல்,  இந்துக்களாகவே இருந்து இன்று நம்மை இந்துக்களாகவே பெற்றெடுத்த நமது பெற்றோர்கள் மற்றும் மூதாதையர்கள் மீது அளப்பரிய பாசமும் மரியாதையும் ஏற்படுகிறது. அவர்களது வழியில் நாமும் வாழ்ந்து, இந்த உயரிய சனாதனத்தை நமது அடுத்த தலைமுறைக்கு பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்ச்சியும் எழுகிறது….”

ஆயிரம் கோடி வசூல் என்பதை தாண்டி இப்படி படம் பார்க்கும் இந்துக்கள் மனதில் எழும் ஒரு வைராக்கியமே இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி. 5000 கோடி பத்தாயிரம் கோடி கொடுத்தாலும் அதற்கு ஈடாகாது!

அப்படி ஒரு எண்ணத்தை விதைத்திருக்கும் படத்தை தயாரித்த சோல சக்கரவர்த்திக்கும் பாராட்டுக்கள்

அதே நேரம், அப்படி கடந்த 1200 ஆண்டுகளில் நாம் இழந்த நம்மில் இருந்து பிரிந்த உறவுகளை மீட்டெடுக்க 1947 க்கு பிறகு ஒரு முறையான அமைப்பு தோன்றாத நிலையிலும், பல துறவியர் மற்றும் தன்னார்வலர்களின் முயற்சியால் தேசம் முழுவதும் ஆங்காங்கே பலர் தாய் மதம் திரும்புவது ஆறுதலாகவும் இருக்கிறது.

திரௌபதி 2 படம் பார்த்தால், விலகிச் சென்றவர்கள் விரும்பி திரும்புவார்கள்!

அப்படி திரும்பி விட்டால் ,அந்நிய சித்தாந்த அடிமை ஆட்சியாளர்களின் ஓட்டு வங்கிகளில், ஓட்டை விழுந்து விடும்!

திரௌபதி 2, இந்துக்கள் மட்டுமல்ல, இங்கிருந்து விருப்பமே இல்லாவிட்டாலும், தனது மூதாதையர்களின் நர மாமிசத்தை தின்றவர்களின் மதத்திலா நாம் இருக்கிறோம் …? என்று உணர்ந்து நிர்பந்தங்களுக்காக விலகிச் சென்றவர்களும் பார்க்க வேண்டிய படம்!

மோகன்.ஜி, சனாதனத்தை காக்க வாளெடுத்த வீரசிவாஜி முதல் வீர வல்லாள மகாராஜா போன்ற ஆயிரம் ஆயிரம் வீர புருஷர்களின் வரிசையில், தனது அறிவாயுதத்தை வீசி இடம் பிடித்திருக்கிறார்!